இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இந்து நாட்காட்டியின் படி, எந்த தேதியில், எந்த நேரத்தில் வழிபடப்படுகிறது, வைகுண்ட ஏகாதசி பூஜை முறை மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம்.
வைகுண்ட ஏகாதசி என்பது ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்தில் நுழைவதற்கு முன்பு வரும் ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பகவான் விஷ்ணு கருட வாகனத்தில் பூலோகத்திற்குள் நுழைந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார் என்பது நம்பிக்கை. மார்கழி மாதம் வருகிற இந்த வைகுண்ட ஏகாதசி நாளில், சொர்க்கவாசல் திறக்கும் என்பது நம்பிக்கை. இந்த வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் பல ஆண்டுகள் தவமிருந்த பலனை பெறலாம் என்பது நம்பிக்கை.
பொதுவாக வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் வருகிறது. இந்த ஆண்டு ஏகாதசி டிசம்பர் 23-ம் தேதி வருகிறது. அதனால், வைகுண்ட ஏகாதசி நேரம், பூஜை முறை மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம்.
வைகுண்ட ஏகாதசி நாளில் புராதன விஷ்ணு கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பது பெரும் நிகழ்வாக நடைபெறுகிறது. அதனால், ஏகாதசி வருவதற்கு முன்தின இரவு அன்று கண் விழித்து விரதம் இருந்தால் பகவான் விஷ்ணுவின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு டிசம்பர் 22 ம் தேதி காலை 10 மணி வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் அமைகிறது. டிசம்பர் 23 ம் தேதி காலை 06.27 வரை ஏகாதசி திதி உள்ளது. அதற்கு பிறகு துவாதசி திதி துவங்கி, டிசம்பர் 24 ம் தேதி காலை 07.13 வரை உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசி திதியில் விரதத்தை துவங்கி, துவாதசி திதியிலே முடிக்க வேண்டும். இதனால் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் டிசம்பர் 22 ம் தேதியே துவங்கிவிட வேண்டும். அன்று பகல் பொழுது வரை உணவு உட்கொள்ளலாம். அன்று அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு வந்து, விரதத்தை துவங்குவது சிறப்பானது. இரவில் முடிந்தவர்கள் உபவாசமாகவும், முடியாதவர்கள் எளிமையான உணவுகளையும் எடுத்துக் கொண்டு, அன்று இரவு வழக்கம் போல் தூங்கலாம்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலை கணக்கில் வைத்தே மற்ற கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படும். அதை தரிசித்து விட்டு அன்று முழுவதும் உபவாசம் இருந்து விரதம் இருக்க வேண்டும்.
டிசம்பர் 23ம் தேதி முழுவதும் பெருமாளின் நாமங்களை சொல்லி, இறைவனின் சிந்தனையிலேயே இருப்பது மிகவும் சிறப்பானது. டிசம்பர் 23 ம் தேதி அன்று இரவு தான் கண் விழிக்க வேண்டும். டிசம்பர் 24 ம் தேதி காலை நெல்லிக்காய், அகத்திக்கீரை உள்ளிட்டவை சேர்த்த முழுமையான உணவு தயாரித்து, பெருமாளுக்கு படைத்து விட்டு உணவு சாப்பிடலாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராட வேண்டும். உண்ணாவிரதத்தைத் தொடங்கி, நெய் தீபம் ஏற்றி, உங்கள் வீட்டின் பூஜை மந்திரில் உள்ள விஷ்ணுவின் படம் அல்லது சிலையின் முன் தியானம் செய்யுங்கள். விஷ்ணு பூஜை செய்யும் போது துளசி, மலர்கள், கங்கை நீர் மற்றும் பஞ்சாமிர்தம் சேர்க்க வேண்டும். நீங்கள் மாலையில் புதிய பழங்களை சாப்பிடலாம். ஏகாதசியின் மறுநாள் ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.