Vaiyapuri Viral Photoshoot Tamil News : ‘அட யாருப்பா இது? நம்ம வையாபுரியா?’ என்கிற அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார் பிக் பாஸ் புகழ் வையாபுரி. 2020-ம் ஆண்டில் மனோபாலா, மன்சூர் அலி கான், விவேக் உள்ளிட்ட சில மூத்த நடிகர்களை ஸ்டைலாகவும் மாடனாகவும் மாற்றி போட்டோஷூட் செய்தார் பிரபல ஆடை வடிவமைப்பாளரும் ஸ்டைலிஸ்ட்டுமான என்.ஜெ.சத்யா.
View this post on Instagram
இந்த ஆண்டு தொடக்கத்தில் நகைச்சுவை நடிகர் வையாபுரியை வைத்து வித்தியாச போட்டோஷொட் ஒன்றை செய்துள்ளார். ஸ்டைலிஷான இரண்டு வித்தியாச மேக் ஓவரில் வையாபுரியை மாற்றிய சத்யா, அவற்றில் ஒன்று இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் போல தோற்றத்தை தந்தது. வையாபுரியின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, “நான் அவன் இல்லை! என் வாழ்நாள் முழுவதும் வையாபுரி என் டோப்பல்கெஞ்சர் என்று ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்று தினேஷ் கார்த்திக் ட்வீட் செய்தும் இருக்கிறார்.
Naan Avan Illai ????
Never knew Vaiyapuri was my doppelgänger all my life https://t.co/N4SDLZxSzH— DK (@DineshKarthik) January 2, 2021
இந்த போட்டோஷூட்டிற்காக வாய்ய்புரி மொட்டையடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த ‘பைரவா’, ‘தெறி’ ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சத்யா, சிவகார்த்திகேயனின் ‘கனா’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலான இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, “நான் சமீபத்தில் வையாபுரி ஐயாவுடன் செய்த ஃபோட்டோஷூட் வைரலாகியுள்ளது. மேலும், என்னுடைய வேலைப்பாட்டை தினேஷ் கார்த்திக் தோற்றத்துடன் ஒப்பிடப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மிக முக்கியமாக தினேஷ் கார்த்திக்கே அதை மறு ட்வீட் செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”