Advertisment

இதுதான்யா கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ரகசியம்!

இந்த மாதிரி டேஸ்டில் இதற்கு முன் சாப்பிட்டே இருக்க மாட்டீங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
valakai varuval hotel style valakai varuval

valakai varuval hotel style valakai varuval

valakai varuval hotel style valakai varuval : செட்டிநாடு வாழைக்காய் வறுவல். செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு ஒரு சரியான சைடிஷ்.

Advertisment

இது வரை நீங்கள் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியில், வாழைக்காய் ஃப்ரை. இந்த மாதிரி டேஸ்டில் இதற்கு முன் சாப்பிட்டே இருக்க மாட்டீங்க.

செய்முறை:

முதலில் 2 வாழைக்காயை எடுத்து நன்றாக கழுவி அரை வேக்காடாக அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு, இஞ்சி, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் பொடி, உப்பு இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு மைபோல அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அவித்து வைத்திருக்கும் வாழைக்காய் தோல் உரித்து விட்டு வட்டமாக சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஒரு தட்டில் கொட்டி அதில் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் முன்னும் பின்னும் மசாலா சேரும்படி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு உங்களுக்கு தேவையான எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு, மசாலா தடவி வைத்திருக்கும் வாழைக்காய் சேர்த்து வறுத்து எடுங்கள். இரண்டு பக்கமும் வேகவிட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை சாம்பார்சாதம், தயிர்சாதம் ஆகியவற்றிற்கு மிகவும் ருசியாக இருக்கும். இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி..!

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment