இந்த காதலர் தினத்திற்கு சின்னத்திரை நடிகைகளின் ஸ்பெஷல் லுக்கை தெரிந்துகொள்வோம்.
சின்னத்திரையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் ஆலியா மானாசா, இளம் பச்சை நிறத்தில் புடவை அணிந்துள்ளார்.
கழுத்தை ஒட்டி சிறிய ஜெயின் மற்றும் டாலர், ஜிமிக்கி கம்மல், பச்சை வளையல் அணிந்துள்ளார். மல்லிகை பூ வைத்துள்ளார்.
இதுபோல சைத்திரா ரெட்டி கருப்பு நிற புடவையை தேர்வு செய்துள்ளார். அதில் கோல்டன் பாடர் உள்ளது. கருப்பு நிற பேக் மற்றும் இந்த புடவைக்கு ஏற்றவாறு கருப்பு பொட்டு என்று கச்சிதமாக மேக் அப் அணிந்துள்ளார்.
இதுபோல சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி கருப்பு சுதார் அணிந்து அதற்கு ஸ்கை ப்ளூ கலர் துப்பட்டா போட்டுள்ளார். இந்த சுடிதாரின் பின்பக்கம் கருப்பு லேஸ் ஆல் ஆனது.
ப்ரீதி ஷர்மா என்ற சீரியல் நடிகை பிங்க் நிறத்தில் புடைவை கட்டியுள்ளார். அது நெட் துணியிலும், இலைகள் கொண்ட வேலைபாடுகள் கொண்டது. மேலும் இதற்கு அவர் கையில்லா பிளவுசை போட்டுள்ளார். மேலும் பின்புறத்தில் ஆழமான கட் கொடுத்து கயிறு வைத்து கட்டுவது போல் உள்ளது. இதற்கு ஏற்றவாறு கற்கள் கொண்ட கம்மலை போட்டுள்ளார். பிங்க் லிப்ஸ்டிக் போட்டுள்ளார்.