scorecardresearch

Valentine’s Day 2020 : டிவி பிரபலங்களின் காதல் கணவர்கள் இவர்கள் தான்!

‘அன்பினால் ஆனது உலகம்’ என சும்மாவா சொன்னார்கள்.

TV Celebrities with their husbands
TV Celebrities with their husbands

Valentine’s Day 2020 : பிப்ரவரி மாதம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது ‘காதலர் தினம்’ தான். என்ன தான் அன்பை தினம் தினம் வெளிப்படுத்தினாலும், காதலர் தினத்தில் வெளிப்படுத்தும் அன்பு தனிப்பட்ட சந்தோஷம் தரக்கூடியது தான். இதோ இந்த ஆண்டின் காதலர் தின வாரத்தில் நாம் இருக்கிறோம். இந்தத் தருணத்தில் டிவி பிரபலங்கள் தங்களது காதல் கணவர்களுடன் இருக்கும் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Priyanka Deshpande, Valentine's Day
விஜய் டிவி பிரியங்கா, சூப்பர் சிங்கர் தயாரிப்பு குழுவில் இருந்த நவீனை காதல் திருமணம் செய்துக் கொண்டார்
Anjana VJ, Valentine's Day
சன் மியூஸிக்கில் இருந்து ஜி தமிழுக்கு இடம் மாறிய அஞ்சனா, கயல் படத்தின் நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்
Myna Nandhini, Valentine's Day
முதல் திருமணம் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு, தனது நீண்ட கால நண்பர் யோகேஷை மணந்தார் மைனா நந்தினி
VJ Manimegalai, Valentine's Day
நடன இயக்குநர் ஹுஸைனின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டார் வி.ஜே.மணிமேகலை
Aranthangi Nisha, Valentine's Day
’கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பல மேடைகளை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷா தனது கணவர் ரியாஸுடன்
Rachitha Dinesh, Valentine's Day
சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ரச்சிதா, தன்னுடன் வேறொரு சீரியலில் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்
Diya Menon, Valentine's Day
சன் நெட்வொர்க் தொலைக்காட்சிகளின் தொகுப்பாளினி தியா மேனன் தனது காதல் கணவர் கார்த்திக்குடன்

 

 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Valentines day 2020 tv celebrities with theirs lovable husbands