இன்று காதலர் தினம். காதலை வெளிப்படுத்தும் ஒரு நாள். உலகெங்கிலும் உள்ள காதல் ஜோடிகள்’ ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதற்கும், பரிசுகள், சாக்லேட்டுகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் காத்திருக்கிறார்கள்.
பல உணர்வுகள் நிறைந்த காதலர் தினத்தில்’ தமிழ் சீரியல் பிரபலங்களும் காதலர்களுக்கும், சிங்கிள் பசங்களுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பார்க்கலாம்!
ஃபரினா ஆசாத்!
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஃபரினா வெண்பா, தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து’ சிங்கிள் பசங்க மிங்கிள் ஆக வாழ்த்துகள்! எல்லாருக்கும் ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என வாழ்த்தியுள்ளார்.
நக்ஷ்த்திரா நாகேஷ்
தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷ்த்திரா நாகேஷ் தனது கணவர் ராகவ் குழந்தையாக இருக்கும் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ”காதலர் தின வாழ்த்துக்கள் ராகவ். அற்புதமான மனிதனாக வளர்ந்ததற்கு நன்றி, ஆனால் உங்கள் கண்களில் அந்த அதிசயத்தையும் உங்கள் இதயத்தில் உள்ள மந்திரத்தையும் ஒருபோதும் இழக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்’
மைனா நந்தினி
மைனா நந்தினியும், தனது கணவர் யோகேஷ் உடன் இருக்கும் படங்களை பகிர்ந்து காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில்,” லவ் யூ பாப்பா, லவ் யூ ஃபார் எவர்! நம்மக்கு பொண்ணு இருந்தா’ இந்த மாதிரி ஒரு பையேன் தான் வேணும்னு வேண்டிருப்பேன். நீ கிடச்சதுக்கு ஐ ஆம் சோ லக்கி! ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என யோகேஷ்-ஐ டேக் செய்துள்ளார்.
சுஜிதா தனுஷ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதா தனுஷ்’ தன் கணவருடன் இருக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து’ காதல் என்பது காதலிக்கப்படுவது. ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என பதிவிட்டுள்ளார்.
சுந்தரி கேப்ரியல்லா
சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா, தன் கணவர் உடன் இருக்கும் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ”புரிதல் ஒன்று தான் ஒரு உறவை நிலை நிறுத்தும், எனது புரிதல் நீ, எனது ராட்சசன் நீ,எனது கோவம் நீ, யாவும் நீ " ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என வாழ்த்தியுள்ளார்.
அபிநவ்யா -தீபக்
இதேபோல சின்னத்திரையின் புதுமணத் தம்பதிகளான, அபிநவ்யா தனது கணவர் தீபக் உடன் சேர்ந்து போட்டோ ஷூட் எடுக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என் தங்கமே, என் எல்லாமே என பதிவிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி திருமணம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
சரண்யா துராடி
நடிகை சரண்யா துராடி, விஜய் டிவியில் நடித்து வந்த வைதேகி காத்திருந்தாள் சீரியல் தொடங்கிய சில நாட்களிலே கைவிடப்பட்டது. இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர்’ ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, தனது காதலர் ராகுல் சுதர்ஷனுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். முன்பு, ஷரண்யாவும், ராகுலும் நீருக்கடியில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைராலகியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“