காதலர் தின மாதத்தில் ஸ்பெஷலாக கருத்தப்படும் 7 நாட்களை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்.
மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் காதலும் ஒரு அங்கு என்றுத்தான் சொல்ல வேண்டும். காதல் என்ற உறவை நம் சங்க இலக்கியத்திலிருந்து, மேற்கத்திய கலச்சாரம் வரை கொண்டாடி வந்துள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி மாதம் காதல் மற்றும் காதலருக்கான மாதமாக கருத்தப்படுகிறது.
இந்நிலையில் இதில் உள்ள 7 சிறப்பான நாட்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
பிப்ரவரி 7 – ரோஸ் டே
இந்த நாளில் காதலர்கள் ரோஜா மலர்களை பகிர்ந்துகொள்வார்கள். நமக்கு பிடித்தவர்களிடம் மலர்களை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பிப்ரவரி 8 – ப்ரோபோல் டே
இதில் நமக்கு பிடித்த நபர்களிடம் காதலிப்பாதாக அல்லது காதலிக்கும் எண்ணம் இருப்பதாக கூறுவார்கள்.
பிப்ரவரி 9 – சாக்லேட் டே
இந்த நாளில் நாம் காதலிக்கும் நபர்களிடம் சாக்லேட் கொடுத்து, நமது அன்பை வெளிப்படுத்தலாம்.
பிப்ரவரி 10 – டெட்டி டே
இதில் நமக்கு பிடித்தவர்களுக்கு,அவர்களுக்கு தெரியாமல் ஸ்பெஷல் பரிசுகளை வழங்கலாம். டெட்டி பியர் பொம்மைகளையும் வழங்கலாம்.
பிப்ரவரி 11- ப்ராமிஸ் டே
இதில் எந்த சூழ்நிலை வந்தாலும் காதலிப்போம் என்று சத்தியம் செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிரியாமல் இருப்போம் என்றும் சத்தியம் செய்வோம்.
பிப்ரவரி 12- ஹக் டே
இந்த நாளில் காதலிக்கும் இணையை நாம் அணைத்துக்கொண்டு, நமது அன்பை வெளிப்படுத்தலாம். உடல் மொழியில் பேசுவதுபோல இது இருக்கும்.
பிப்ரவரி 12- கிஸ் டே
இந்நிலையில் காதலில் உருகி, முத்தங்களை பகிரும் நாள் இது.
பிப்ரவரி 14 : காதலர் தினம் அல்லது வேலன்டைன் நாள்
இந்த நாளில் காதலர்களாக மாறி டேட்டிங் செய்வது, பிடித்த இடங்களுக்கு செல்லலாம். இதுபோன்று இருவரும் பிடித்த விஷயங்களை செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“