வாழைத்தண்டில் பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
நறுக்கிய நாரில்லா இளம் வாழைத்தண்டு– 15
உப்பு – சிறிது
பெருங்காயம் பொடி – சிறிதளவு
ஓமம் – ¼ டீஸ்பூன்
ஊற வைத்து அரைக்க
அரிசி – 50 கிராம்
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம்
சிவப்பு மிளகாய் – 5
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
அரிசி, பருப்பு வகைகளை அரைமணி நேரம் ஊறவிட்டு, சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தூளுடன் சேர்த்து அரைக்கவும். அடுத்து அதில் ஓமம் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைத் தண்டு எடுத்து அரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சத்து சுவையான வாழைத்தண்டு பஜ்ஜி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“