Advertisment

கோவை கோவில் திருவிழா; கடவுள் வேடமணிந்து கலைஞர்கள் வள்ளி கும்மி நடனம்; பார்வையாளர்கள் உற்சாகம்

கோவை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடமணிந்து நடன கலைஞர்கள் வள்ளி கும்மி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

author-image
WebDesk
New Update
valli kummi

கோவை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடமணிந்து நடன கலைஞர்கள் வள்ளி கும்மி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரபலமான, பாரம்பரியமிக்க நாட்டுப்புற கலைகளான வள்ளி கும்மியாட்டம், பவள கும்மி, ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட தொன்மையான நடன கலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் ஆடப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நாட்டுப்புற கலைகளை கற்றுத் தேர்ந்தவர்கள் ஒரு சிலரே உள்ளனர். குறிப்பாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக சங்கமம்  கலைக்குழுவின் ஆசிரியர் கனகராஜ், உதவி ஆசிரியர்கள் தமிழ்செல்வன், கார்த்தி ஆகியோர் வள்ளி கும்மி ஆட்டத்தை பல்வேறு கிராமங்களுக்கு சென்று இலவசமாக கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொண்ட கருமத்தம்பட்டி மாணவர்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை  முன்னிட்டு கோவில் வளாகத்தில் நடைபெற்ற அரங்கேற்றத்தில்  கலந்துகொண்டு நடனமாடினர். இதில் 3 வயது சிறுவர், சிறுமியர் முதல் கல்லூரி மாணவிகள், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஒரு சேர கும்மி பாடல்களுக்கு ஒரே மாதிரியான நடன அசைவுகளுடன் உற்சாகமாக நடனமாடினர்.

அரங்கேற்ற விழாவில் சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட கடவுளர்களின் வேடங்களில் வந்த நடன கலைஞர்கள் குழந்தைகளுடன் இணைந்து கும்மி பாடல்களுக்கு நடனமாடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் மக்கள் வள்ளி கும்மி அரங்கேற்றத்தை கண்டு ரசித்தனர்.

கோவை கோவில் திருவிழா; கடவுள் வேடமணிந்து கலைஞர்கள் வள்ளி கும்மி நடனம்’ பார்வையாளர்கள் உற்சாகம் #Kovai

Posted by IETamil on Thursday, February 22, 2024

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment