scorecardresearch

சீரியல் நடிகை நக்ஷ்த்திரா திடீர் திருமணம்

நக்ஷ்த்திரா எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் விஷ்வா சாம் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். அந்த போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Nakshathra married
Serial actress Nakshathra got married

கேரளாவில் பிறந்த நக்ஷ்த்திரா, கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.

அதில் வெண்ணிலா என்னும் கேரக்டரில் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை இழந்த தன் முத்து மாமாவையும், அவரது குழந்தையையும் நேசிக்கும் அப்பாவி பெண்ணாக நடித்தார். இந்த சீரியலில் ஸ்வேதாவாக வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி, கயல் என்ற புதிய சீரியல் மூலம் சன் டிவியில் எண்ட்ரி ஆனார்.

நக்ஷ்த்திரா, இப்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் அழகும், அறிவும் நிறைந்த அடாவடி கிராமத்துப் பெண்ணாக வள்ளி@பேபிமா கேரக்டரில் நக்ஷ்த்திரா நடிக்கிறார்.  அவளின் ஜோடியாக விஜய் டிவி ஈரமான ரோஜாவே சீரியல் புகழ், ஷ்யாம் நடிக்கிறார்.

இந்நிலையில், நக்ஷ்த்திரா எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் விஷ்வா சாம் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். அந்த போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதைப்பார்த்த பிறகுதான், நக்ஷ்த்திராவுக்கு திருமணம் முடிந்த விஷயம் பலருக்கும் தெரியவந்தது. விஷ்வா ஒரு டாட்டூ ஆர்டிஸ்ட், மற்றும் ஜீ தமிழ் டி.வி. சீரியல்களின் எக்ஸிகியூட்டிவ் பிரொடியூசராகவும் உள்ளார்.

சமீபத்தில்  ஸ்ரீநிதி, தனது உயிர்த் தோழியான நக்ஷ்த்திரா குறித்து பேசிய விஷயங்கள் ஊடகங்களில் பரபரப்பாகியது.

அந்த வீடியோவில் ஸ்ரீநிதி பேசுகையில்;  நானும் அவளும் ஒரே வீட்டுலதான் இருந்தோம். அவளுக்குப் பெரிய நடிகையா எல்லாம் ஆகனும் ஆசை கிடையாது. எல்லா பொண்ணுங்க போலவும் கல்யாணம் ஆகி குடும்பம், குழந்தைனு செட்டில் ஆக ஆசைப்பட்டா. அப்படி இருக்கும் போதுதான் ஒருத்தரை பாத்தா. ரொம்ப நல்லவரா இருக்காருனு சொல்லி நான்தான் அவளுக்கு அறிமுகம் கொடுத்தேன். ஒரே மாசத்துல அவங்க பேசி கல்யாணம் வரைக்கும் வந்துட்டாங்க. திடீர்னு கடந்த நவம்பர் மாசம் அவளுக்கு நிச்சயதார்த்தம் வச்சுட்டாங்க. அவளுடைய தங்கச்சியை கூட கூப்பிடல. இதைப்பத்தி மாப்பிள்ளை வீட்டுல விசாரிக்கும்போது  மாப்பிள்ளை அம்மா என்னை அடிக்க வந்துட்டாங்க. அன்னைக்கு தான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப அழுத நாள்.

அவளை, அந்த பையனோட ஃபேமிலி பயங்கரமாக இப்போ லாக் பண்ணிட்டாங்க. ‘சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. அவளுக்கு இப்போ 2 லட்சம் சம்பளம் வந்துட்டு இருக்கு. ஆனா அக்கவுன்ட்ல இப்ப பத்தாயிரம் கூட இல்லாத நிலைமைல தான் இந்த பையனோட ஃபேமிலி அவளை வச்சிருக்கு.

இது எங்க கூட இருக்குற எல்லாருக்குமே தெரியும். நட்சத்திரா அம்மாவும் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நம்பி பொறுமையா போயிட்டு இருக்காங்க.

இதெல்லாம், இப்ப நான் ஏன் சொல்லிட்டு இருக்கேன்னா, விஜே சித்ராவுக்கு இப்படி தான் சரியான வாழ்க்கை அமையாமல் அவளுடைய வாழ்க்கையே முடிஞ்சு போச்சு.

சீக்கிரமா, நக்ஷ்த்திராவ விடலனா நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்’ என அந்த லைவ்-வில் ஸ்ரீநிதி பேசியிருந்தார்.

ஆனால், ஸ்ரீநிதி பேசியதில் எந்த உண்மையும் இல்லை. அவளுக்கு உடம்பு சரியில்லனு உங்க எல்லாருக்குமே தெரியும், அதனால தான் இப்படியெல்லாம் பேசுறா.  நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என நக்ஷ்த்திரா கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Valli thirumanam serial actress nakshathra got married