வெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி

Chinnathirai Nayanthara Vani Bhojan: பெற்றோர் குறுக்கீடு செய்வதில்லை. நாம சரியான முடிவுகளை எடுத்தால், அவங்க நிச்சயம் சந்தோஷப் படுவாங்க.

Chinnathirai Nayanthara Vani Bhojan: பெற்றோர் குறுக்கீடு செய்வதில்லை. நாம சரியான முடிவுகளை எடுத்தால், அவங்க நிச்சயம் சந்தோஷப் படுவாங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vani Bhojan, Sun TV Vani Bhojan, Actor Vani Bhojan, வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா

Vani Bhojan, Sun TV Vani Bhojan, Actor Vani Bhojan, வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா

Sun TV Vani Bhojan: விமான பணிப் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

Advertisment

சன் டி.வி.யின் தெய்வ மகள் சீரியலில் சத்யாவாக கலக்கிய அதே வாணி போஜன் தான்! அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

ஊட்டி அரசுக் கலைக்கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர் வாணி போஜன். எனவே தமிழ் பேசத் தெரிந்தவர் என்பதை கவனத்தில் கொள்க! சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல்!

Advertisment
Advertisements

Vani Bhojan, Sun TV Vani Bhojan, Actor Vani Bhojan, வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா, நடிகை வாணி போஜன் chinnathirai nayanthara Vani Bhojan

சன் டிவி-யின் ‘தெய்வ மகள்’ சீரியல் வாய்ப்பை பயன்படுத்தி, சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். சின்னத்திரை நயன்தாரா என்கிற பெயர் கிடைத்தது என்றால், சும்மாவா?

என்னதான் திறமையும், அழகும் கொட்டிக் கிடந்தாலும், மேலே இருக்கிறவன் கருணையும் இருக்க வேண்டும் என்பார்கள் சினிமாத் துறையில்! இவருக்கு, ‘ஓ மை கடவுளே’ என்கிற பெயரிலேயே தமிழ்ப் படம் அமைந்தபோது, அவ்வளவு சந்தோஷத்தில் துள்ளினார். துரதிருஷ்டவசமாக அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.

Tamil Tv Serial Deivamagal, Vani Bhojan, Sun TV Vani Bhojan, Actor Vani Bhojan, வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா Vani Bhojan: Sun TV Serial to tollywood

இப்படி ‘கடவுளே’ கைவிட்டிருந்த நிலையில்தான், தெலுங்கு இயக்குனர் ஷமிர் சுல்தான் கண்களில் இவர் பட்டார். ஸாரி... சென்னையில் போஸ்டர் ஒன்றில் இருந்த இவரது படம், ஷமிர் சுல்தானின் கண்ணில் பட்டது. உடனடியாக தனது படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்திற்கு ‘புக்’ செய்தார். அண்மையில் படம் வெளியாகி வாணி போஜனுக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

‘நிஜமாகவே எனக்கு தெலுங்கு தெரியாது. ஆனாலும் இயக்குனரும், எனக்கு ஜோடியாக நடித்த இயக்குனர் தருண் பாஸ்கரும் நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்கள். சென்னையில் 2 முறை ரசிகர்களுடன் உட்கார்ந்து ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தை பார்த்தேன். ரசிகர்கள் என் நடிப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்’ என பூரிப்புடன் சொல்கிறார், வாணி போஜன்.

Tamil Tv Serial Deivamagal, Vani Bhojan, Sun TV Vani Bhojan, Actor Vani Bhojan, வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா Vani Bhojan: வெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா

தமிழில் மேலும் பல வாய்ப்புகள் வாணி போஜன் வீட்டுக் கதவுகளை தட்டுகின்றன. ‘எனது திரைப் பயணத்தில் என் பெற்றோர் குறுக்கீடு செய்வதில்லை. நாம சரியான முடிவுகளை எடுத்தால், அவங்க நிச்சயம் சந்தோஷப் படுவாங்க. அவங்களை பெருமைப் படுத்தும் விதமாகவே நான் நடந்து கொள்வேன்’ என்கிற வாணி போஜன் முகத்தில், நம்பிக்கை மின்னல்கள்!

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: