Vanitha Hariharan Biography : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மாயன், அரவிந்துக்கு தங்கையாக ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வனிதா ஹரிஹரன்.
Advertisment
வனிதா ஹரிஹரன் திருமணம்
சன் டிவி-யில் ஒளிபரப்பாகிய தெய்வமகள் தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்த வனிதா, காதல் முதல் கல்யாணம் வரை, வாணி ராணி, பகல் நிலவு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து பிரபலமானார். தற்போது விஜய் டிவி-யின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும், சன் டிவி-யின் ரோஜா சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த வனிதா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார்.
சீரியலில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வனிதாவுக்கு நிஜத்தில் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. கணவர் பெயர் கார்த்திக் அசோக் குமார். சீரியல்களில் நடித்து வரும் இவர் 2017-ம் ஆண்டு வெளியான ‘செஞ்சிட்டாளே என் காதல’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வனிதா, “எனக்கு டான்ஸ், பாட்டு சுத்தமா வராது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக புதுசா டிரை பண்ணப்போறேன். எனக்கு என் ஃபேமிலி ஃபுல் சப்போர்ட். என்னால் முடிஞ்ச அளவுக்கு திறமையை வெளிப்படுத்துவேன்” என்று கூறியிருந்தார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில் பெயிண்டிங் செய்வதை பொழுது போக்காக வைத்திருக்கிறார் வனிதா. அதோடு இவருக்கு நான் வெஜ் உணவுகள் என்றால் அத்தனை விருப்பமாம். அதிலும் சைனீஸ் என்றால் மிகவும் பிடிக்குமாம்.