vanitha lakshmi ramakrishanan live behindwoods video :வனிதா - பீட்டார்பால் திருமணம் ஊர் பிரச்சனை ஆனது யூடியூப் பார்த்தாலே தெரியும். விஜயகுமாரின் மகள் வனிதா ஒருசில படங்களில் நடித்தாலும் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் மூலம் மீண்டும் சினிமா வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறினார்.
Advertisment
ஏற்கனவே,அவரின் முதல் திருமண சர்ச்சை, பையன் ஸ்ரீஹரி விஜய் பிரிவு, ராபர்ட் மாஸ்டர் சர்ச்சை என வனிதா குறித்த ஏகப்பட்ட செய்திகள் பல நேரங்களில் விமர்சங்களை சந்தித்திருந்தது. அதன் பின்பு, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து வனிதாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
அதனைப்பயன்படுத்தி கொண்டு 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் கலக்கினார். அந்த சமையல் கலையை அப்படியே யூஸ் செய்து தனக்கென தனி யூடியூப் சேனலை தொடங்கினார். அதிலும் வனிதாவுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இப்படி அமைதியாக சென்றுக் கொண்டிருந்த வனிதாவின் வாழ்க்கையில் இப்போது புயல் அடித்துக் கொண்டிருக்கிறது.
வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தது தான் இத்தனைக்கும் காரணம். பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு 7 வருடங்கள் பிரிந்து இருக்கிறார் என்று தான் வனிதா தெரிவித்திருந்தார். ஆனால், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசெபத் பீட்டர் பால் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், இன்னும் முறைப்படி விவகாரத்து பெறவில்லை என புதிய குண்டை தூக்கி போட்டார்.
Advertisment
Advertisements
இதன் பின்பு நடந்த அனைத்து சம்பவங்களும் இணையவாசிகள் நன்கு அறிவார்கள். எலிசபத்தும் வனிதாவும் யூடியூப் மூலம் பரஸ்பரம் விளக்கம் கொடுத்தனர். பின்னர் சாடிக் கொண்டனர்
எலிசபத்திற்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும், வனிதா ஸ்டைலிலேயே யூட்யூப்பில் தன் பெயரில் தனி சேனல் நடத்தி வரும் சூர்யா தேவி கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். வனிதாவுக்கும் எலிசபத்துக்குமான பிரச்னை, சூர்யாதேவிக்கும் வனிதாவுக்குமான பிரச்னையாக யூட்யூப்பில் மாறியது. இதன் உச்சகட்டமாக இருவரும் தனிமனித வசைபாடலில் இறங்கி விட்டனர்
சூர்யாதேவி தன்னைப் பற்றி அவதுாறு பரப்புவதாக போரூர் காவல்நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். இதற்கு இடையில் தான் எலிசெபத் கேட்டுக் கொண்டதால் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் ரியட் செய்தார். அதற்கு வனிதா கொடுத்த ரிப்ளை மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என ஆள் ஆளுக்கு வீடியோ மூலம் தங்களது கருத்தை கூறி வருகிறார்கள்.
இந்த பிரச்சனையில் பிரபல யூடியூப் சேனல் ’பிகைண்ட்வுட்ஸ் ஆர்’ எலிசெபத் வீட்டுக்கு சென்று பேட்டி, பீட்டார் பால் மகனுடன் பேட்டி, லைவ் டாக், வனிதாவிடம் பேட்டி என பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. ட்ரெண்டிங்கிலும் இடம் பெற்றிருந்தது. இந்த நேரத்தில் தான் பிகைண்ட்வுட்ஸ் லைவ் டாக்கில் வனிதா- லட்சுமி மோதல் எல்லையை தாண்டியது.
இதற்கு ரசிகர்கள் தரப்பில் எதிர்மறை விமர்சனங்கள், மற்றும் சிலர் இனி இதுப்போன்ற வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் இனி வனிதா பிரச்சனை குறித்த எந்த வீடியோவையும் வெளியிட போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தந்துள்ளனர்.