பீஃப் பிரியாணி சாப்பிட்டா குத்தமா? ஹேட்டர்களுக்கு வனிதா நெத்தியடி பதில்!

வனிதாவின் பீப் பிரியாணி ரெசிபிக்கு பல மட்டத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அதற்கு வனிதா தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமாரின் மகளான வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் வனிதாவும் ஒரு போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வனிதாவுக்கு, சின்னத்திரையில் இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. பிக்பாஸூக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் தனது அபாரமான சமையல் திறமைகள் மூலம் நிகழ்ச்சியின் வெற்றியாளரானார். பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிறகு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறினார். தற்போது வனிதாவுக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் குக் வித் கோமாளி வெற்றிக்கு பிறகு தனது சமையல் திறமையை உலகுக்கு காட்டும் வகையில் வனிதா விஜயகுமார் என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அதில் தான் சமைக்கும் உணவுகளை வீடியோ எடுத்து பதிவேற்றி வந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, வனிதா தனது யூடியூப் சேனலில் மலபார் பீஃப் பிரியாணி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தாலும், சிலர் வனிதாவை திட்டி வருகின்றனர். அதில் நீங்கள் இந்துவா? கருமம், இது தான் நீங்கள் வெளியிட்ட மோசமான வீடியோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதற்கு பதிலளித்த வனிதா, “மக்களே, எப்படி இருக்கிறீர்கள்?” எனது நட்பு வட்டத்தில் மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் உள்ளனர். இது வெறும் உணவு. நான் ஏழு வயதில் இருந்து அமெரிக்காவில் வளர்ந்தேன். இதனால் சிறுவயதில் இருந்தே பல நாட்டு உணவுகளை சாப்பிட்டு வருகிறேன். நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். அதை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது. பிடிக்கவில்லை என்றால் அதே பிரியாணியை வீடியோவில் என் மகள் கூறியது போல், உங்களுக்கு பிடித்த இறைச்சி அல்லது காய்கறிகளுடன் சமைத்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம் கூலாக பதில் அளித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha puts an end to beef biryani controversy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com