‘துபாய் மீன் கடை பார்த்திருக்கீங்களா?’ வனிதா விஜயகுமார் வைரல் வீடியோ!

Vanitha Vijayakumar Dubai Fish Market Viral Video Tamil News அங்கு, நாம் வாங்கிக்கொடுக்கும் அசைவ பிராணிகளை சமைத்துக் கொடுக்கும் கான்செப்ட்.

Vanitha Vijayakumar Dubai Fish Market Viral Video Tamil News
Vanitha Vijayakumar Dubai Fish Market Viral Video Tamil News

Vanitha Vijayakumar Dubai Fish Market Viral Video Tamil News : சமீபத்தில் துபாய் சென்ற வனிதா, அங்குள்ள மீன் மார்க்கெட்டை நமக்குச் சுற்றி காட்டினார். நம்ம ஊர் மீன் மார்க்கெட் பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், துபாயில் உள்ள மார்க்கெட் பார்த்து ஆச்சரியப்பட்ட வனிதா, அதனைக் காணொளியாகப் பதிவு செய்து நம்மோடுப் பகிர்ந்துகொண்டார். உண்மையில் இது மீன் மார்க்கெட்தானா என்கிற அளவிற்கு அவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்திருந்தனர் அங்குள்ள மக்கள்.

நம்ம ஊர் மால் போல வடிவமைப்பு கொண்ட இடத்தில், எண்ணிலடங்கா வகை வகையான கடல் வாழ் உயிரினங்கள் விற்பதற்காகத் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆக்டொபஸ், லாப்ஸ்டர், வெவ்வேறு வகையான இறால் என அத்தனை உயிரினங்களையும் சுத்தம் செய்து, அடுக்கி வைத்திருந்தனர். மேலும், நண்டு, மீன் முட்டைகள் எனப் பலவற்றையும் காண முடிந்தது. கை கழுவுவதற்காக சோப் என அவ்வளவு சுத்தம் பாதுகாக்கப்பட்டிருந்தது. இங்கேயும் பேரம் பேசியபடி தனக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டார் வனிதா.

அங்கிருந்த ஓர் பெரிய மீன் வகையை தன்னால் ஒரு கையால் தூக்க முடியாது என்று கூறியவரிடம், வழக்கம்போல, ‘நான் யார் தெரியுமா?’ என்று நகைச்சுவையாக உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இத்தனை கடல் உயிரினங்களைப் பார்த்ததும் வணிதாவிற்கு பசிக்க ஆரம்பிக்க, அருகிலுள்ள உணவகத்திற்குச் சென்றார். அங்கு, நாம் வாங்கிக்கொடுக்கும் அசைவ பிராணிகளை சமைத்துக் கொடுக்கும் கான்செப்ட். அதுமட்டுமில்லாமல், தங்களின் ரெகுலர் உணவுகளையும் ருசி பார்க்கலாம்.

பிறகு தனக்குப் பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டே, தான மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்தபோது கமல் மீன் மார்கெட்டைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட சில நினைவலைகளை நம்மோடுப் பகிர்ந்துகொண்டார் வனிதா.

மீண்டும் மார்கெட்டிற்கு சென்று சிலவகை மீன்களை வாங்கினார். அதற்குள் அங்குள்ள விற்பனையாளரிடமும் வம்பிழுத்து விடைபெற்றார். பிறகு பவர் ஸ்டாருக்கு இரண்டு தொப்பிகள் வாங்கினார். வாங்கிய உணவுப் பொருள்களை சமைப்பதற்குத் தேவையான மளிகை பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார் வனிதா. வனிதாவின் இந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar dubai fish market viral video tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express