Advertisment

கடுகுதான் இந்த டிஷுக்கு மெயின் - வனிதா விஜயகுமாரின் வித்தியாச மீன் குழம்பு ரெசிபி! #Video

Vanitha Vijayakumar Fish Gravy Recipe Viral Youtube Video தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ஏராளமான என்டெர்டெயின்மென்ட் காணொளிகளைப் பதிவு செய்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Vanitha Vijayakumar Fish Gravy Recipe Viral Youtube Video

Vanitha Vijayakumar Fish Gravy Recipe Viral Youtube Video

Vanitha Vijayakumar Fish Gravy Recipe Viral Youtube Video : ஏராளமான சர்ச்சைகளுக்கு இடையே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் வனிதா விஜயகுமார். எவ்வளவுதான் தன்னைப்பற்றிய விமர்சனங்களை முன் வைத்தாலும், அனைத்தையும் தகர்த்து தனக்கான பாதையை உருவாக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். சில இடங்களில் நெகட்டிவாக தோன்றினாலும், 'நோ ப்ராப்லம்' என்று தூசிதட்டிவிட்டுக் கடந்துவிடுவார். பிக் பாஸ், குக் வித் கோமாளி என சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பங்கேற்றவர் தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ஏராளமான என்டெர்டெயின்மென்ட் காணொளிகளைப் பதிவு செய்து வருகிறார். குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் வெற்றியாளராக இவர் சமீபத்தில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வித்தியாசமான ரெசிபி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

Advertisment

மச்சேர் ஜோர் எனும் பெங்கால் வகை மீன் குழம்புதான் சமீபத்தில் இவர் பகிர்ந்துகொண்ட ரெசிபி. கொல்கத்தாவில் மிகவும் பிரசித்திபெற்ற இந்த ரெசிபியை இனி பார்க்கலாம். இந்த ரெசிபியை மிகவும் முக்கியமான பொருள், கடுகு. இந்த மீன் குழம்பிற்கு வித்தியாச மணம் கொடுக்கப்போவது கடுகுதான் என்கிற குறிப்போடு செய்முறையைப் பகிர்ந்துகொண்டார்.

மச்சேர் ஜோர் செய்யத் தேவையான பொருள்கள்

பொரிப்பதற்கு

கடுகு எண்ணெய் - தேவையான அளவு
திலாப்பியா மீன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை பழம் - 1/2 பழம்

தாளிக்க

கடுகு எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கீறிய பச்சை மிளகாய் - 4

குழம்பிற்கு

அரைத்த வெங்காயம் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைத்த தக்காளி - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
கடுகு தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

பொரிப்பதற்குத் தேவையான பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அந்த கலவையை அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

கடுகு எண்ணெய் கிடைக்கவில்லை என்றால், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து உபயோகிக்கலாம்.

எண்ணெய்யில், கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து , ஊறவைத்த மீனைப் பொரித்து எடுக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் அரைத்த வெங்காயம் சேர்க்கவும். அதனோடு கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பிறகு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு தூள், தனியா தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

சிம்மில் வைத்து, இந்த கலவையை மூடி போட்டு நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.

பிறகு தேங்காய்ப் பால், கொத்தமல்லி  சேர்க்கவும்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் எந்த ஒரு மீனையும் சமைக்கக் கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, ஏற்கெனவே நாம் பொரித்து வைத்த மீன் சேர்த்துக் குறைந்த தீயில் 5 நிமிடங்கள் மட்டும் கொதிக்கவைத்து இறக்கிவிடுங்கள்.

இறுதியாகத் தேங்காய்ப் பால் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து சில நிமிடங்களில் இறக்கினால், வித்தியாசமான சுவையான மீன் குழம்பு தயார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar Youtube Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment