மேரேஜ் லைஃப்ல நான் சந்தோஷமா இருந்தது ஆகாஷ்-க்கு பிடிக்கல: வனிதா விஜயகுமார்

நான் என் கல்யாண வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஆனா, அந்த சந்தோஷம் நிலைக்கல. தேவையில்லாத சில விஷயங்களால, என் வாழ்க்கை கெட்டுப்போச்சு.

நான் என் கல்யாண வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஆனா, அந்த சந்தோஷம் நிலைக்கல. தேவையில்லாத சில விஷயங்களால, என் வாழ்க்கை கெட்டுப்போச்சு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Second

Vanitha Vijayakumar

சினிமா உலகில் அறிமுகமாகி, காதல், திருமணம், விவாகரத்து எனப் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். சில காலத்திற்குப் பிறகு, வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

பின்னர், வனிதா, ஆனந்த் ஜெய்ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய்னிதா என்ற மகள் பிறந்தாள். இந்தத் திருமணமும் சில நாட்களில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தனது இரண்டாவது திருமணத்தின் போது நடந்த சோகமான நிகழ்வுகள் குறித்து கலட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

”நான் என் கல்யாண வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஆனா, அந்த சந்தோஷம் நிலைக்கல. தேவையில்லாத சில விஷயங்களால, என் வாழ்க்கை கெட்டுப்போச்சு. மனஸ்தாபங்கள் வந்து, ஒருத்தரை ஒருத்தர் வில்லன் மாதிரி பார்க்க ஆரம்பிச்சோம். 'உன்னாலதான் என் குழந்தை போய்ட்டா'னு சொல்ற அளவுக்கு ஒரு பிரிவினை எங்கக்கிடையே வந்துச்சு. கடைசியா, அந்த கல்யாணமே முடிஞ்சு போச்சு.

என் திருமண வாழ்க்கையில பிரிவு உண்டானதுக்கு முக்கியமான காரணம் எங்க அம்மா அப்பாதான். தேவையே இல்லாத விஷயத்துல தலையிட்டாங்க. ஸ்ரீஹரி அப்பா ஆகாஷ் அதை இன்னும் தூண்டிவிட்டாரு. நான் சந்தோஷமா இருக்கறது அவருக்கு பிடிக்கல, பொறாமை. 

Advertisment
Advertisements

ஆனா என் அப்பா ஏன் இப்படி பண்ணாருன்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல”, என்று வனிதா எமோஷனலாக அந்த பேட்டியில் கூறினார்.

2020-ஆம் ஆண்டில், பீட்டர் பால் என்பவருடன் வனிதா மூன்றாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி, வனிதா மீது காவல்துறையிடம் புகார் அளித்ததால், இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தத் திருமணமும் விரைவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: