New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Vvup-1.jpg)
Vanitha Vijayakumar Latest Viral Video Weight Loss Recipe Tamil News
Vanitha Vijayakumar Latest Viral Video Weight Loss Recipe Tamil News மேலும் இதில் ஓட்ஸ் இருப்பதால், உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
Vanitha Vijayakumar Latest Viral Video Weight Loss Recipe Tamil News
Vanitha Vijayakumar Latest Viral Video Weight Loss Recipe Tamil News : சமையலில் பட்டையைக் கிளப்பும் வனிதா, வித்தியாசமான அதே சமயம் டேஸ்டியான உடல் எடை குறைக்கும் காலை உணவு ரெசிபியை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். அதுதான் ஓட்ஸ் மசாலா ஆம்லெட். ஓட்ஸ் உடல் எடை குறைப்பிற்கு மிகவும் நல்லது. வனிதா பகிர்ந்துகொண்ட அந்த வித்தியாசமான ரெசிபியை இப்போது பார்க்கலாம்.
"முதலில் ஒரு கப் அளவு ஓட்ஸ் எடுத்துக்கொண்டு அதனை உலர்ந்த நிலையில் அப்படியே மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதனோடு அரை கப் அளவு பால் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பால் வேண்டாம் என்றால் அரை கப் அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவு மற்றும் பால் அல்லது தண்ணீரை நன்கு கலந்துவிட்ட பிறகு, அதனோடு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி அளவு வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். இதனோடு கேப்ஸிகம் உள்ளிட்ட உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். அதனோடு ஒரு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
இதற்கு அடுத்து இரண்டு முட்டைகளை எடுத்து அதனை நன்கு கலந்து அடித்துக்கொள்ளுங்கள். இதனை நாம் கலந்து வைத்திருக்கும் ஓட்ஸ் மாவு கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இரண்டு முட்டை சாப்பிடுவதனால், உடலில் கொழுப்பு ஏறிவிடும் என்று பயப்படவேண்டாம். உடலுக்கு இந்த புரதம் மற்றும் கொழுப்பு அவசியம். மேலும் இதில் ஓட்ஸ் இருப்பதால், உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இப்போது, சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் மாவு கலவையை ஊற்றி ஆம்லெட் போன்று செய்து எடுக்கவும். சட்னி, குழம்பு, ஊறுகாய் என எதுவேண்டுமானாலும் இதற்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். அவ்வளவுதான் மிகவும் எளிமையான ரெசிபி இது. கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். ஓட்ஸ் இல்லையென்றால், கோதுமையில் கூட செய்யலாம். செய்து பார்த்துச் சொல்லுங்கள்" என்று கூறியபடி காணொளியை நிறைவு செய்தார். நிச்சயம் இந்த ரெசிபி பலருக்கு உபயோகமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.