பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவி என்பதில் வெட்கப்படுகிறேன் – வனிதா விஜயகுமார் ஷேரிங்ஸ்

Vanitha Vijayakumar shares her PSBB School experience அவர்கள் ஏதாவது குறை மற்றும் புகாரை உங்களிடம் சொன்னால், அதனை அலட்சியப்படுத்தாமல், என்ன ஏது என்று ஆராய்ந்து பாருங்கள்.

Vanitha Vijayakumar shares her PSBB School experience Tamil News
Vanitha Vijayakumar shares her PSBB School experience Tamil News

Vanitha Vijayakumar shares her PSBB School experience Tamil News : கடந்த இரண்டு வாரங்களாகவே பத்ம சேஷாத்ரி பள்ளியைப் பற்றிய விமர்சனங்கள்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் காணமுடிகிறது. அதனைத் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றங்கள் அரங்கேறும் மற்ற பள்ளிகளைப் பற்றியும் பல இந்நாள் மற்றும் முன்னாள் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவியான வனிதா விஜயகுமார் தான் படித்த பள்ளியைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு பற்றியும் தன்னுடைய யூடியூப் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.

“நான் மட்டுமல்ல என் தங்கைகள் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியும் பிஎஸ்பிபி பள்ளியில்தான் படித்தோம். சாதாரணமாக எங்களுக்கு அங்கு சீட் கிடைக்கவில்லை. அதற்காக எங்கள் அப்பா மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். நான் படிக்கிற காலத்தில் இதுபோன்ற எந்தவித பிரச்சனைகளும் இல்லை. உண்மையில் அந்தப் பள்ளியில் என்னுடைய நாட்கள் மிகவும் அழகானவை. ஆனால், அங்கு இதுபோன்று நாடாகும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

இதுபோன்ற பிரச்சனை என்றதும், காவல் துறையினர் வேகமாக செயல்பட்டு, சம்பந்தப்பட்டவரைக் கைது செய்த விஷயம் பாராட்டுக்குரியது. இப்படி செய்தால்தான் மற்றவர்களுக்கும் பயம் வரும். இதனாலேயே பல பள்ளிகள் பற்றிய உண்மைகளும் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இடெஹல்லாம் தெரிஞ்சும் எப்படி பள்ளி நிருவாகம் ஆக்ஷன் எடுக்காமல் இருந்தது என்பதுதான் எனக்கு கேள்விக்குறியாக உள்ளது. இப்போதாவது வெளியே பேசிக்கிறோமே என்று ஒருபக்கம் நிம்மதியாகவும் இருக்கிறது.

என்றாலும், ஒரு குற்றத்தை வெளியே கொண்டுவர 10 வருடங்கள் எடுத்துக்கொள்வது அதிகம். செய்கிற தப்புக்கு அப்போப்போ தண்டனை கொடுத்தாகவேண்டும். நம்ம கிட்ட யாராவது அத்துமீறினால் கண்டிப்பாக அதை நினைத்து நாம வெட்கப்படக்கூடாது. தைரியமாக வெளியே சொல்லவேண்டும். அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும். இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவியாக இவ்வளவு நாள் கழித்து இந்த விஷயம் வெளியே வந்ததை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.

இதற்கான தேர்வு பெற்றோர்களிடம் உள்ளது. தினமும் உங்கள் குழந்தைகளோடு அமர்ந்து 5 நிமிடமாவது பேசுங்கள். எல்லா குழந்தைகளும் தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படையாகச் சொல்லிவிட மாட்டார்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி நீங்கதான் பேசவேண்டும். அதேபோல அவர்கள் ஏதாவது குறை மற்றும் புகாரை உங்களிடம் சொன்னால், அதனை அலட்சியப்படுத்தாமல், என்ன ஏது என்று ஆராய்ந்து பாருங்கள்.

இதுபோன்ற விஷயத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துங்கள்.சமூக அழுத்தத்தை அவர்கள்மீது சுமத்தாதீர்கள்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar shares her psbb school experience tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com