Vanitha Vijayakumar Skincare Tips : சர்ச்சைகளுக்குக் குறைவில்லாமலும் ஊடக கன்டென்ட்களுக்கு பஞ்சமில்லாமலும் கடந்த சில வருடங்களாகவே பிசியாக இருக்கும் வனிதா விஜயகுமார், தனக்கென புதிய சேனலையும் ஆரம்பித்து அதிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகப்பருக்கள் மற்றும் முகத்தில் ஏற்படும் வடுக்கள் நீக்குவதற்கான எளிமையான டிப்ஸ் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். இது லாஸ்லியாவுக்கு மிகவும் உபயோகமாகவும் இருந்ததாம்.

“வாழ்கைங்குறது ஒரு போர்க்களம். அதில் அழகா இருந்தோம் என்றால் பாதிப் போரைத் தாண்டிவிடுவோம். இங்கு அழகு என்று நான் குறிப்பிடுவது நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான். நாம் கருப்பு, சிவப்பு, உயரம், குள்ளம் என எப்படி வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம். குறை என்று பார்த்தால் அது குறைதான். நிறை என்று பார்க்கத் தொடங்கினால் நிச்சயம் அது நிறைதான்.

டீனேஜ் பருவத்தில் முகத்தில் பருக்கள் வருவது இயல்பான ஒன்று. ஆனால், சிலருக்கு அது 20, 30 வயதினருக்கும் வருவதுண்டு. பருக்கள் வடுக்களாகவும் மாறிவிடும். இதனை இயற்கை எளிய முறையிலேயே சரிசெய்யலாம். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நான் லாஸ்லியாவுக்கு கொடுத்த டிப்ஸ் இதுதான். நன்கு உபயோகமாக இருந்தது எனக்கூறி எனக்கு நன்றியும் கூறினாள். அந்த எளிய குறிப்பைத்தான் உங்களோடு பகிர்கிறேன்.

நன்கு சுத்தமான மிக்சி ஜாரில் ஃப்ரெஷ் புதினா இலைகளை அரைத்து, முகத்தில் அப்லை செய்யவேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் அல்லது பன்னீர் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இதனை நீங்களே முகத்தில் தடவாதீர்கள். நிச்சயம் வேறு யாராவதுதான் அப்லை செய்யவேண்டும். முகம் முழுவதும் அப்லை செய்து, அரைமணிநேரம் தூங்கினாலும் பரவாயில்லை. ஆனால், ஓய்வு முக்கியம். பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம்.
இரண்டு நாளுக்கு ஒருமுறை இதுபோன்று செய்யும்போது, நிச்சயம் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களும் மறையும். பருக்கள் இருப்பவர்கள் நிச்சயம் சர்க்கரைக் கலந்த இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil