Vanitha Vijayakumar tattoo controversy Tamil News : எங்குச் சென்றாலும் பரபரப்புகளையும் விமர்சனங்களையும் கூடவே சுமந்து செல்லும் வனிதா விஜயகுமார், தற்போது மறுபடியும் டாட்டூ விஷயத்தில் வைரலாகி வருகிறார். இம்முறை அவர் நெஞ்சில் அச்சிடப்பட்டிருக்கும் டாட்டூதான் பிரேக்கிங் நியூஸ்.
தன் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் வாழ்ந்து வந்த வனிதா, கடந்த மூன்று ஆண்டுகளாக லைம் லைட்டிலேயே இருக்கிறார். சர்ச்சைகளுக்கு பேர்போன இவர், விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 மூலம், பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டார். இவருடைய இயல்பு பெரும்பாலான மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், தனி பெண்ணாக இருந்து ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ளும் அவருடைய முரட்டுத்தன்மைக்கான காரணத்தைப் பலரும் ஆதரித்து வந்தனர்.
Vanitha Vijayakumar Tattoo Controversy Tamil News
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள். அதிலும் குறிப்பாக ரசிகைகள்தான் அதிகம். பிக் பாஸ் வெற்றியைத் தொடர்ந்து 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றி வாகையும் சூடினார். அதன் பிறகு தன் சமையல் திறமையை வெளிப்படுத்தும் விதமாக தனக்கென புதிய யூடியூப் சேனலை ஆரம்பித்தார் வனிதா.
Vanitha Vijayakumar with Ramya Pandian
அப்போது சேனலுக்காக உதவி செய்ய முன்வந்த பீட்டர் பால் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏற்கெனவே தன் முதல் மனைவியோடு விவாகரத்து பெறாமல் வனிதாவை கரம் பிடித்த லாக் டவுனில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தைச் சுற்றி ஏராளமான சர்ச்சைகள் உருவாகின. இந்நிலையில் தங்கள் காதலின் ஆழத்தை உணர்த்தும் வகையில் வனிதா, பீட்டர் என்றும் பீட்டர் பால், வனிதா என்றும் தங்கள் கைகளில் பச்சை குத்திக்கொண்டனர்.
Vanitha Vijayakumar Youtube Channel
நாளடைவில் மதுவுக்கு அடிமையான பீட்டரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் வனிதா. இந்த நிகழ்வுகள் அத்தனையும் தன் வலைத்தளங்களில் பதிவிட்டுக்கொண்டே வந்தார் வனிதா விஜயகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது 'குக்கு வித் கோமாளி சீசன் -2' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். அதில், தலையில் இலை வடிவிலான கிரீடம், காதில் அதே மாடல் காதணி, அதற்கு மேட்சாக கழுத்தில் செயின் என எல்லாம் ஒரே மாடலில் அணிந்த தன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் வனிதா.
Vanitha Vijayakumar Cooku with Comali
அதில் காஸ்டியூம் மட்டுமல்ல, வனிதா நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூவும் நன்கு கேப்ச்சராகியிருக்கிறது. அவ்வளவுதான்.. சும்மா விடுவார்களா நெட்டிசன்கள். அது என்ன டாட்டூவாக இருக்கும் என்கிற தீவிர டிஸ்கஷனில் இறங்கிவிட்டனர். ஏற்கெனவே வனிதா தன் கையில் பீட்டர் பால் என வரைந்திருந்த டாட்டூவை அழித்து வேறு மாதிரி மாற்றினார். மேலும், இனி எவன் பெயரையும் பச்சை குத்த போவதில்லை என்றும் கூறியிருந்தார். இப்போது இந்த சர்ச்சைக்கு என்ன பதிலளிக்கப்போகிறாரோ!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"