உடல் எடை குறைய இந்த உணவுதான் காரணம் – வனிதா விஜயகுமார் டயட் டிப்ஸ்!

Vanitha Vijayakumar Weight Loss Tips Diet Plan உணவில் சிறிதளவு நெய் சேர்ப்பதனால் எதுவும் ஆகாது. அதில் இருப்பது நல்ல கொழுப்புதான்.

Vanitha Vijayakumar Weight Loss Tips Diet Plan Tamil
Vanitha Vijayakumar Weight Loss Tips Diet Plan Tamil

Vanitha Vijayakumar Weight Loss Tips Diet Plan Tamil : எப்படி இருந்த வனிதா, இப்படி ஆகிட்டாங்களே! என்று ஆச்சரியப்படாதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு உடல் எடையைக் குறைத்திருக்கிறார் வனிதா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததைவிட தற்போது மேலும் மெலிந்திருக்கும் இவர், தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அதன் சீக்ரெட்டை பகிர்ந்துகொண்டார்.

“பொதுவாகவே உடல் எடையை குறைக்க, ஏராளமான டயட், உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால், நான் அப்படியெல்லாம் எதுவும் பண்ணவே இல்லை. என்னுடைய டயட் மிகவும் எளிமையான ஒன்று. அதைதான் உங்களோடு இன்று ஸர் செய்யப்போகிறேன்” என்றவர் அதன் ரெசிபியையும் பகிர்ந்துகொண்டார்.

தினசரி சாப்பிடும் சாப்பாட்டில் சிறிதளவு மாற்றம் மட்டுமே செய்தேன். எப்போதும் சாப்பிடும் கறிக்குழம்பு, , மீன் குழம்பு, சாம்பார் ஆகியவற்றோடு அரிசிக்கு பதிலாக, கேழ்வரகு, சாமை, தினை,குதிரைவாலி போன்ற மில்லட் வகைகளை மாற்றி சாப்பிட்டேன். இவை உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்யமானதும்கூட.

 அதில், இன்று சாமை மில்லட் தயிர் சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். 1 கப் சாமை மில்லட்டுக்கு 2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும். சாமை சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அதனோடு ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து அடுப்பில் வைத்து 3 விசில் வரும் வரை வைக்கவும். தினசரி உணவில் சிறிதளவு நெய் சேர்ப்பதனால் எதுவும் ஆகாது. அதில் இருப்பது நல்ல கொழுப்புதான். நம் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. அதனால், நெய் சாப்பிட தயங்கவேண்டாம்.

விசில் அடங்கியதும், சாமையை வேறு பாத்திரத்தில் மாற்றி நன்கு ஆறவைக்கவும். தயிர் சாதம் எப்போதும் சூடாக செய்யக்கூடாது. இந்த இடைப்பட்ட நேரத்தில், தாளிப்பு செய்துவிடலாம். சிறிய கடாயில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்துக்கொள்ளவும். பிறகு சாமையில் தயிர், சிறிதளவு பால், உப்பு, தேவைப்பட்டால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்துகொள்ளவும். அதனோடு நம் தாளிப்பையும் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான மில்லட் தயிர் சாதம் ரெடி. இதனோடு எந்த விதமான பொரியல் மற்றும் ஊறுகாய் வைத்து சாப்பிடலாம்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar weight loss tips diet plan tamil

Next Story
பாலியல் சீண்டல்கள் எந்த துறையில்தான் இல்லை? – பாண்டவர் இல்லம் மல்லிகா ஷேரிங்ஸ்!Pandavar Illam Malliga Aarthi Subash Interview Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express