/tamil-ie/media/media_files/uploads/2021/04/Vv5up.jpg)
Vanitha Vijayakumar Youtube Channel Specials Tamil News
Vanitha Vijayakumar Youtube Channel Specials Tamil News : வனிதா விஜயகுமார் செல்லும் இடமெல்லாம் சர்ச்சைகளும் பின்தொடரும். தந்தையுடனான பிரச்சனையிலிருந்து பீட்டர் பால் எனும் நபருடனான திருமணம் வரை அத்தனையும் மீடியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், தன்னம்பிக்கை இழக்காத வனிதா, தன் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டேதான் இருக்கிறார். அந்த வரிசையில்தான் தனக்கென யூடியூப் சேனல் ஆரம்பித்ததும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Vv6.png)
சுமார் ஒரு வருடத்திற்கும் முன்பு தன்னுடைய பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்ட சேனலின் பல கன்டென்ட்டுகள் வைரல். ஆரம்பத்தில் தன் வாழ்க்கையில் நடந்தவை, நடப்பவை மற்றும் நாட்டில் நடந்துகொண்டு இருப்பவை எனப் பதிவு செய்து வந்தவர், பின்னாளில் குக் வித் கோமாளி பாலாவோடு இணைந்து சமைத்த காணொளியைப் பதிவேற்றினார். அப்போதுதான் முதல் முதலில் இவருடைய சேனல் மில்லியன் வியூஸ்களை தொட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியன், இத்தாலியன் என பல்வேறு வகையான உணவு வகைகளை செய்து காணொளியாகப் பதிவேற்றினார் வனிதா. அத்தனையும் லட்சங்களைக் கடந்து வியூஸ்களை பெற்றன. இந்நிலையில்தான் பீட்டர் பால் உடனான சர்ச்சையில் சிக்கினார். எனினும், குடும்பத்துடன் இவர்கள் சென்ற கோவா டூர் காணொளி, ட்ரெண்டானது.
அதுமட்டுமின்றி, லைவ், Vlog, அழகுக் குறிப்புகள், ஷாப்பிங் அட்ராசிட்டிஸ், எடை குறைப்பு டிப்ஸ், டயட் என ஏராளமான உபயோகமான விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார் வனிதா.பீட்டர் பெயரைக் கையில் பச்சை குத்திக்கொண்டு, பிறகு போகி பண்டிகையின்போது அதனை மாற்றி டிசைன் செய்த வீடியோ வைரலாகப் பகிரப்பட்டது. இடையில் ஏகப்பட்ட நெகட்டிவ் கமென்ட்டுகளும், பலர் இவருடைய சேனலை விட்டு வெளியேறியிருந்தாலும், இவருடைய பல வீடியோக்கள் ட்ரெண்டிங் வந்ததுண்டு. இப்போது வரை சுமார் 28 லட்ச சப்ஸ்க்ரைபர்ஸ் வனிதாவின் சேனலுக்கு உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.