நடிகை வனிதா விஜயகுமார் பெண்கள் தங்களுக்கு பொருத்தமான சரியான சைஸ் ப்ரா அணிவது முக்கியம் என்றும் தவறான சைஸ் ப்ரா அணிவதால் இவ்ளோ பிரச்னைகள் கண்டிப்பாக வரும் என்று எச்சரித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவில், பெண்கள் தங்களுக்கு பொருத்தமான சரியான சைஸ் ப்ரா அணிவது முக்கியம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், 10-க்கு 8 பெண்கள் சரியான சைஸ் ப்ரா அணியாததால் பல பிரச்னைகளை எதிர்கொள்வதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள ஷார்ட்ஸ் வீடியோவில் கூறியிருப்பதாவது: “சரியான சைஸ் ப்ரா அணியாத 10-ல் 8 பெண்களுக்கு முதுகு வலி வரும். நடக்கும்போது நேராக நடக்க முடியாது. அவர்கள் எங்கே போனாலும், நேராக கான்ஃபிடண்ட்டா தெம்பா நடக்க முடியாது. இதில தெம்பு ரொம்ப முக்கியம். ஏனென்றால், நாம் எங்கேயாவது போகிறோம் வருகிறோம் என்றால் டயர்ட்னெஸ் வரும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் ப்ரா அளவு சரியான அளவு முக்கியம். ப்ரா சைஸ் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட விஷயம் என்று நான் கண்டிப்பாக சொல்வேன். ஒவ்வொருவரும் இன்றைக்கு உங்களுடைய அளவு தெரியவில்லை என்றால், தயவு செய்து ஒரு கடைக்கு செல்லுங்கள். ஒருமுறை நீங்களே அளவெடுத்துக்க்கொள்ளுங்கள். ஒரு ப்ரா ஃபிட்டிங் உங்களுக்கு கண்டிப்பாக தெரியும். அதோட சைஸ் என்ன என்று அந்த குறிப்பிட்ட ப்ரா ஷாப்பில் இருக்கக்கூடிய பெண்கள், சரியான சைஸ் ப்ரா தேர்வு செய்வதற்கு உதவி செய்வார்கள். அதைமட்டும் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்றால் போதும். ஒருவேளை நாம் வெயிட் போடுகிறோம். அல்லது உடல் இளைக்கிறோம். உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்தது என்றால் ஒரு வருஷத்துக்கு ஒருமுறை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அது தவறு கிடையாது.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”