Advertisment

சாயாதேவி- ராதிகாவை ஒரே நிகழ்வில் இணைய வைத்த வரலட்சுமி திருமண நிச்சயம்: மணமகன் நிக்கோலாய் சச்தேவ் யார்?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நீண்ட நாள் நண்பரான நிகோலாய் சச்தேவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நீண்ட நாள் நண்பரான நிகோலாய் சச்தேவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

Advertisment

நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சூழ இவர்களின் நிச்சயதார்த்த விழா மும்பையில் எளிமையாக நடந்து முடிந்தது. இந்த நிச்சயதார்த்த விழாவில் ராதிகா, சரத்குமார், சரத்குமாரின் முதல் மனைவி சாயா, ராதிகாவின் மகள் மற்றும் மகன், வரலட்சுமியின் சகோதரி மற்றும் மணமகன் குடும்பத்தார் பங்கேற்றனர்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.  விஷாலுடன் நீண்ட காலமாக வரலட்சுமி இணைத்து பேசப்பட்டதும் பின்னர் அவர்கள் பிரிந்ததும் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த விஷயம்.  அதன் பிறகு வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் வரலட்சுமி மும்பையில் ஒரு தொழிலதிபரை அவர் காதலிப்பதாக வெளிப்படையான செய்திகள் இல்லை ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக நிக்கோலாய் சச்தேவ் அவருக்கு அறிமுகம் என இப்போது தகவல்கள் வருகின்றன.  தனது தாயார் சாயாதேவிக்கு ஏற்கனவே சச்சி தேவை வரலட்சுமி அறிமுகம் செய்து வைத்திருந்ததாக தெரிகிறது.  திருமண நிச்சய விழாவில் சாயாதேவியுடன் சச்சி தேவ் மிகுந்த பரிச்சயத்துடன் நிற்கும் புகைப்படங்கள் அதற்கு சாட்சியாக தெரிகின்றன.கலைப் பொருட்கள், கலை வடிவங்களை காட்சிப் படுத்தும் ஆர்ட் கேலரிஸ்ட் எனும் பணியை நிக்கோலாய் செய்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment