நிஜமாவே இது சொர்க்கம்! வரலட்சுமி சரத்குமார் துருக்கி டூர் வீடியோஸ்
Varalakshmi sarathkumar: வரலட்சுமி துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த சில வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Varalakshmi sarathkumar Turkey tour: நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டகோழி 2, சர்கார், மாரி 2 எனப் பல படங்களில் சவாலான வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
Advertisment
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் வரலட்சுமி நடித்துள்ளார். ‘தெனாலி ராமகிருஷ்ணா BA.BL’ படம் மூலம் 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமானார்.
2021ல் வந்த ‘நாந்தி’ படம் இவருக்கு விமர்சன ரீதியாக பாராட்டை வாங்கிக் கொடுத்தது. பிரசாந்த் வர்மாவின் 'ஹனுமான்' படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வரலட்சுமி, சென்னையில் இருந்து ஹைதராபாத்தில் நிரந்தரமாக குடியேறிவிட்டார். இப்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது வரலட்சுமி துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த சில வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோஸ் இங்கே!
இந்த வீடியோ ஹகியா சோபியாவில் எடுக்கப்பட்டது. Hagia Sophia துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு பெரிய மசூதி மற்றும் முக்கிய கலாச்சார வரலாற்று தளமாகும். இது பைசண்டைன் கட்டிடக்கலையின் படி வடிவமைக்கப்பட்டது.
இது இஸ்தான்புல்லில் உள்ள பம்முகளே, சுண்ணாம்புக்கல்லில் ஆன நீருற்று ஆகும். இது துருக்கியின் மிகவும் பிரலமான சுற்றுலா தளம். சத்யம் படத்தின் என் அன்பே நானும் நீயின்றி நானில்லை பாடல் தான் இங்குதான் படமாக்கப்பட்டது.