/indian-express-tamil/media/media_files/2025/04/19/9KYmgbD5l4Ui54HTq2oY.jpg)
இப்போது நிறைய பேருக்கு நரம்பு சுருட்டு பாதிப்பு இருக்கிறது. நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்று வேலை செய்வதால் நரம்பு சுருட்டு பாதிப்பு வருகிறது. இதேபோல், நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதாலும் நரம்பு சுருட்டு பாதிப்பு வரலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த நரம்பு சுருட்டை ஆரம்பத்திலேயே குணப்படுத்த தவறினால், அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு இதன் பாதிப்பு இருக்கும். ஆனால், சில வீட்டு வைத்திய முறையை பின்பற்றுவதன் மூலம் நரம்பு சுருட்டை குணப்படுத்தலாம் என்று மருத்துவர் தீபா குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் இருக்கும் வேஷ்டி அல்லது காட்டன் புடவையை சுமார் மூன்று அல்லது மூன்றரை மீட்டர் நீளத்திற்கு வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக சுருட்டி பார்ப்பதற்கு பேண்டேஜ் போன்று மாற்றிக் கொள்ளலாம். இந்த துணியை குளிர்ந்த நீரில் நனைத்து, நரம்பு சுருட்டு பாதிப்பு இருக்கும் காலில் கட்ட வேண்டும். இறுதியாக இதன் மீது ஒரு டவல் போட்டு மூடி விடலாம்.
இதனை காலில் கட்டிய பின்னர், சுமார் 45 நிமிடங்களுக்கு ஓய்வாக இருக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது நரம்பு சுருட்டு பாதிப்பு குறையத் தொடங்கும் என்று மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். இந்த முறையை சாப்பிட்டு முடித்து இரண்டரை மணி நேரம் கழித்து செய்யலாம்.
இதேபோல், மண் சிகிச்சை முறையையும் பின்பற்றலாம் என்று மருத்துவர் தீபா அறிவுறுத்துகிறார். அதன்படி, ஈரப்பதம் இருக்கும் மணலை காலின் கீழே இருந்து மேற்புறம் நோக்கி பூச வேண்டும். இவ்வாறு பூசியதும் இரண்டு கால்களையும் நீட்டி வெயில் படும் வகையில் உட்கார வேண்டும்.
இந்த மண் சிகிச்சையை தினசரி சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் செய்து வந்தால், நரம்பு சுருட்டு பாதிப்பு குறையும் என்று மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அறுவை சிகிச்சையையும் தவிர்க்க முடியும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி - Doctor Vikatan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.