நிறைய பேருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனைதான் வெரிகோஸ் வெயின் எனப்படும் சுருள் சிரை நாளங்கள். இது கால்களில் ஏற்படும் ஒரு நிலை. இந்தப் பிரச்சனையை இயற்கையான முறையில் சரிசெய்ய ஒரு எளிய வீட்டு வைத்தியம் குறித்து இங்கு காண்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 100 மில்லி சீரகம் - 4 சிட்டிகை மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் 100 மில்லி நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 4 சிட்டிகை சீரகம் மற்றும் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை மிதமான தீயில் வைத்து நன்கு சூடுபடுத்தவும்.
மஞ்சளின் நிறம் மாறி, கலவை சற்று இளகி வரும் வரை சூடுபடுத்த வேண்டும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிட்டு, ஒரு வடிகட்டியால் வடிகட்டி, சுத்தமான ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
தினமும் தேவைப்படும் போது, வடிகட்டிய இந்த எண்ணெயை எடுத்து, வெரிகோஸ் வெயின் இருக்கும் பகுதிகளில் கீழ் இருந்து மேல் நோக்கி மெதுவாகத் தடவவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வர, வெரிகோஸ் வெயின்கள் படிப்படியாக குறைந்து வருவதைக் காணலாம்.
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளும், நல்லெண்ணெய் மற்றும் சீரகத்தின் குணப்படுத்தும் தன்மைகளும் இணைந்து இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். இது ஒரு வீட்டு வைத்தியம் என்பதால், தீவிரமான பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.