விந்தணு உற்பத்தி, ரத்த ஓட்டம் பாதிக்கும்; ஆண்கள் உள்ளாடை அணிவது அவசியம் ஏன்? டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்
ஆண்கள் ஏன் உள்ளாடை அணிய வேண்டும்? ஆண்களின் விதைப்பையில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் என்னென்ன? அதை தடுப்பது எப்படி? என்று விளக்குகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
ஆண்கள் ஏன் உள்ளாடை அணிய வேண்டும்? ஆண்களின் விதைப்பையில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் என்னென்ன? அதை தடுப்பது எப்படி? என்று விளக்குகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
ஆண்களுக்கு வலது மற்றும் இடது என 2 விதைகள் உள்ளன. வடிவமைப்பு காரணமாக இடதுபக்கம் இருக்கக் கூடிய விதையில்தான் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை வர அதிகம் வாய்ப்புள்ளது. வலது பக்கம் இருக்கக்கூடிய விதைகளுக்கு இந்த பிரச்னை கிடையாது. கீழ் இருந்து மேல் செல்லும் ரத்தம் ஓட்டம் தடை காரணமாக இடது பக்கம் உள்ள டெஸ்டீஸுக்கு கிடைக்கக்கூடிய ரத்தம் இல்லாமல் போகும்போது ரத்தம் தேங்குகிறது. இதனால் நூற்றில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்படும். அதிகளவில் ரத்தம் தேங்கும்போது முதல் பிரச்னை டெஸ்டீஸ் சுருங்க ஆரம்பிக்கும். 2-வது குழந்தையின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
Advertisment
அறிகுறிகள் என்னென்ன?
ஹார்மோன் பிரச்னை, வயிற்றில் அடிபடுதல், வயிற்றில் கட்டிகள், சீறுநீரகத்திற்கு போகக் கூடிய ரத்த குழாய்களில் பாதிப்பு, உடல் பருமன், அதிக நேரம் நின்றுகொண்டே இருத்தல், விளையாடும்போது விதை பைகள் சிறிய அளவில் வீக்கம் காணப்படும். இந்த மாதிரியான நிலைகளில் ஆண்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம். நாட்பட்ட நாட்கள் இருந்தால் டெஸ்டீஸ் சுருங்கும். இதனால், விந்து உற்பத்தி பாதிக்கப்பட்டு, குழந்தையின்மை பிரச்னை ஏற்படக்கூடும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
வராமல் தடுப்படு எப்படி?
Advertisment
Advertisements
ஆண்களின் விதைகளுக்கு ஒரு பிடிமானம் கொடுப்பதாக ஜட்டிகள் எனும் உள்ளாடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ரத்தம் ஓட்டம் சீராக நடக்கிறது. அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கக் கூடாது, நேரம் கிடைக்கும் போது ரத்த ஓட்டம் செல்வதற்கு ஏதுவாக நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உடல் பருமனாக இருக்கக் கூடாது. அதிகமான வெப்ப சூழ்நிலையில் வேலை பார்க்கக் கூடாது. இதமான சூழ்நிலை இருக்கும்போது தான் விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்த்துவிட்டு உடற்பயிற்சி, சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
சிகிச்சை முறைகள்: அடைப்பு ஏற்படுத்தக் கூடிய வெயின்ஸ்-ஐ மட்டும் ஓபன் சர்ஜரி எனும் அறுவை சிகிச்சை மற்றும் மைக்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகள்தான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது.