வெரிகோஸ் வெயின் அல்லது நரம்புச் சிலந்தி என்பது பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை. பொதுவாக கால்கள் மற்றும் தொடைப் பகுதிகளில் சிவந்த அல்லது கருத்த நிறத்தில் நரம்புகள் புடைத்து காணப்படுவதை நாம் கண்டிருப்போம். இவை நமது உடலில் இருந்து அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் (Veins) ஆகும். ஆரம்பத்தில் இது பெரிய பிரச்சனையாகத் தெரியாவிட்டாலும், வலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும் போதுதான் சிகிச்சை பற்றி சிந்திக்கத் தொடங்குவோம்.
Advertisment
வெரிகோஸ் வெயினுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், லேசான பாதிப்புகளுக்கு இயற்கை முறையிலேயே நல்ல பலன் பெறலாம்.
சைப்ரஸ் ஆயில்: இது ஒரு வகையான அத்தியாவசிய எண்ணெய். இதைப் புடைத்துள்ள நரம்புகள் மீது, கீழிருந்து மேலாக மென்மையாகத் தடவலாம். சைப்ரஸ் ஆயில் தசைகளை ரிலாக்ஸ் செய்து, ரத்த நாளங்களையும் தசைகளையும் சீராக்க உதவும். படிப்படியாக நரம்புகள் மங்கத் தொடங்கும்.
Advertisment
Advertisements
நல்லெண்ணெய் கலவை: 100 மில்லி நல்லெண்ணெயில் நான்கு சிட்டிகை சீரகம் மற்றும் இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சூடுபடுத்தவும். மஞ்சள் நிறம் மாறியதும் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி பாட்டிலில் ஊற்றவும். தினமும் தேவைப்படும் போது இதை கீழிருந்து மேலாக மென்மையாகத் தடவலாம். இதுவும் வெரிகோஸ் வெயினைக் குறைக்க உதவும்.
முக்கியக் குறிப்புகள்:
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.
வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமடைய நேரம் எடுக்கும். ஆனால், முறையாக உணவு, வாழ்வியல் மற்றும் வெளிப்புறப் பயன்பாடு மூலம் நல்ல பலன் பெறலாம்.
அறுவை சிகிச்சை தற்காலிகத் தீர்வாக இருக்கலாம். மீண்டும் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே, இயற்கை முறைகளைப் பின்பற்றுவதே சிறந்த வழி.
வெரிகோஸ் வெயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரியான முறையில் கவனம் செலுத்தினால், அறுவை சிகிச்சை இல்லாமல் நல்ல பலன் பெற முடியும். பொறுமையுடனும் தொடர் பயிற்சியுடனும் இதனைச் சரிசெய்யலாம், என்று முடிக்கிறார் டாக்டர் ராஜலெட்சுமி.