vasanthakumar son mp vasanthakumar family : வசந்த் & கோவின் உரிமையாளரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான ஹெச்.வசந்தகுமார் நேற்று இயற்கை எய்தினார். கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும், காங்கிரஸ் தொண்டர்களையும் கட்சி தலைமையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Advertisment
வசந்த குமாரின் குடும்பம் பற்றி பலருக்கும் வெளியில் தெரியாது.அவரின் மூத்த மகன் வசந்த் விஜய் திரைப்படங்களில் நடித்ததால் அவரை மட்டுமெே பலருக்கும் தெரியும். அவரின் இளைய மகன் வினோத் வசந்தும் திரைப்பட தயாரிப்பாளர் தான். தங்கமலர் என்ற மகளும் வசந்தகுமாருக்கு இருக்கிறார்.
தனது 2 மகன்களின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தினார் வசந்த். அனைத்து வேலைகளையும் பார்த்து பார்த்து அவரே கவனித்தார். 2 பேரின் திருமணத்திலும் ஒட்டுமொத்த திரை நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர். விஜய் வசந்த் திருமணத்திற்கு ரஜினி, கமல் என உட்சப்பட்ச நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர்.
Advertisment
Advertisements
தற்போது நடிகர் விஜய் வசந்த் அவர்கள் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவரின் தந்தை வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே.நடிகர் விஜய் வசந்த் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பர் ஆவார். அதனால் இவர் இயக்கிய முதல் திரைப்படமான சென்னை 28 படத்தில் நடிகர் விஜய் சென்னை நடித்தார். இதன் பின் மீண்டும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது. இந்த படத்திலும் நடிகர் விஜய் வசந்த் நடித்து உள்ளார்.
குடும்பத்தின் மீது வசந்த் குமாருக்கு அளவுக்கு அதிகமான கவனிப்பு. தனது கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களின் குடும்பத்திற்கும் மழை வெள்ளம் காலத்திலும் பல்வேறு உதவிகளை செய்து உள்ளார். வசந்த குமாரின் மறைவு வணிகர்கள், அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news