வீடு கட்டுவது மற்றும் இடம் தேர்வு செய்வதில் வாஸ்து பார்த்து செயல்படும் பழக்கம் மக்களின் மத்தியில் வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, வாஸ்து படி வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று பலரின் நம்பிக்கை ஆகும்.
இன்ஸ்டாகிராமில் வாஸ்து ஆலோசகர் அக்ஷித் கபூர் என்பவர், வேப்ப மரத்தின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வை மேம்படுத்தும் ஆற்றல் பற்றியும், அதை வீட்டில் எங்கு வைக்கவேண்டும் என்பதை பற்றியும் பதிவிட்டுள்ளார்.
வேப்பமரத்தின் நன்மை ஒருவரின் வீட்டில் இருக்கவேண்டும் என்றால், அதை வீட்டின் வடமேற்கு மூலையில் நட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். வீட்டு மனையில் வடமேற்கு பகுதி என்பது வாஸ்து சாஸ்திரம் அறிந்தவர்களால் வாயு மூலை என அழைக்கப்படும்.
“வேப்ப மரம் நல்ல ஆற்றலை ஊக்குவிக்கும் ஒரு தாவரமாகும், மேலும் அதன் ஆரோக்கியத்தை குணப்படுத்தும் பண்புகளால் மக்களின் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. வாஸ்துவின் படி, உங்கள் வீட்டின் வடமேற்கு மூலையில் ஒரு வேப்ப மரத்தை நட வேண்டும், ”என்று கூறுகிறார்.
இயற்கையாக காற்று சுத்திகரிப்பு கருவியாக செயல்படும் வேம்பு, மருத்துவக் குணங்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் இலைகள், பட்டை மற்றும் வேர்கள் அனைத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால் மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்கும் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வேப்ப மரம் வைப்பது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் தொடர்படையும் என்று மனோஜ் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
“ஒருவரின் வீட்டில் வேப்ப மரம் இருப்பது நோய்களைத் தடுக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
வீட்டின் கிழக்கு அல்லது வடக்குப் பகுதியில் வேம்பு நடப்பட வேண்டும் என்று ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார். “கிழக்கு புதிய தொடக்கங்களுடன் தொடர்புடையது மற்றும் வடக்கு செழிப்புடன் தொடர்புடையது, எனவே இந்த இரண்டு திசைகளிலும் மரத்தை நடுவது சொத்துக்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். மேலும், ஆயுர்வேதத்தை உருவாக்கிய பகவான் தன்வந்திரியின் ஆற்றல்கள் இந்த திசைகளில் இருப்பதையும் கவனிக்க முடியும்,” என்றார்.
இருப்பினும், வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு பகுதியில் வேப்ப மரத்தை வைப்பதை தவிர்க்கவேண்டும் என்று அவர் எச்சரித்தார். “ஏனென்றால், தெற்கு நெருப்புடன் தொடர்புடையது மற்றும் தென்மேற்கு பூமியுடன் தொடர்புடையது, இவை இரண்டும் வேப்ப மரத்தின் ஆற்றலுடன் பொருந்தாது,” என்று அவர் கூறினார்.
வீட்டிற்கு சற்று அருகில் ஒரு வேப்ப மரம் நடலாம். “வீட்டின் ஆற்றலில் எந்த எதிர்மறையான விளைவுகளையும் தவிர்க்க வீட்டில் இருந்து குறைந்தது 20 அடி தூரத்தில் மரத்தை நட பரிந்துரைக்கப்படுகிறது,” என்று அவர் இந்தியன் எஸ்பிரஸிடம் அவர் கூறினார்.
இருப்பினும், திறந்தவெளி இல்லாத பட்சத்தில் (அபார்ட்மெண்ட் போன்ற வீடுகளில் வசிப்பவர்கள்) வீட்டில் வேப்பச் செடியைத் தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர் திவ்வ்யா சாப்ரா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil