வாழைப்பூ கூட்டு, இப்படி செய்து பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
100 கிராம் பாசி பருப்பு
முகால் கப் தண்ணீர்
5 சிட்டிகை மஞ்சள் தூள்
2 ½ ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் சீரகம்
3 காய்ந்த மிளகாய்
அரை ஸ்பூன் பெருங்காயம்
2 பச்சை மிளகாய்
4 பல் பூண்டு
கொஞ்சம் இஞ்சி
கொஞ்சம் கருவேப்பிலை
1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 தக்காளி நறுக்கியது
1 வாழைப்பூ
கால் ஸ்பூன் மிளகாய் தூள்
கால் ஸ்பூன் மல்லித் தூள்
தேவையான அளவு உப்பு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை: வாழைப்பூவை நன்றாக கழுவி, நறுக்கி மோரில் சேர்க்கவும். இதை தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். ஒரு குக்கரில் பாசி பருப்பு, தண்ணீர் , மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், அதில் மோரில் சேர்த்த வாழைப்பூவை சேர்த்து வதக்கவும். இதையும் நன்றாக வதக்க வேண்டும். தற்போது வேக வைத்த பருப்பை, இதில் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து உப்பை சேர்த்துகொள்ள வேண்டும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.