வாழைக்காய் பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க. சுவையில் இந்த ரெசிபி அசத்தும்.
வாழைக்காய் பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 2, தனியா – 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி, தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி, கடுகு – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையானஅளவு, கருவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப
வாழைக்காய் பொரியல் செய்முறை :
ஒரு வாணலியில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பிறகு அவற்றை பொடியாக்க வேண்டும். வாழைக்காயை நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவேண்டும்.பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளியுங்கள். அதனுடன் வேகவைத்த வாழைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து கடலைப்பருப்பு பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“