வாழைக்காய் பக்கோடா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
வாழைக்காய் - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் குக்கரில் வாழைக்காய் துண்டுகளை போட்டு, 2 டம்ளர் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, வாழைக்காயை எடுத்து, அதன் தோலை உரித்து விட்டு ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வேக வைத்த வாழைக்காயை கையால் நன்கு மசித்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு சேர்த்து கலக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்யில் போட்டு எடுத்தால் சுவையான வாழைக்காய் பக்கோடா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“