ஒரு முறை இப்படி வாழைக்காய் வறுவல் செய்யுங்க . செம்ம சுவையாக இருக்கும்.
தேவையா பொருட்கள்
2 வாழைக்காய் நீளமாக நறுக்கியது
தண்ணீர்
½ ஸ்பூன் சீரகம்
¼ ஸ்பூன் மிளகு
½ ஸ்பூன் மல்லி
1 பச்சை மிளகாய்
கொஞ்சம் இஞ்சி
2 பூண்டு
¾ டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு தேவையான அளவு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
2 டேபிள் ஸ்பூன் ரவை
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
4 ஸ்பூன் எண்னெய்
கருவேப்பிலை
செய்முறை : வாழைக்கயை நன்றாக கழுவ வேண்டும். அதை நீளமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் சீரகம், மிளகு, கொஞ்சம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் நன்றாக இடித்துகொள்ளவும். தொடர்ந்து இதில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், அரிசி மாவு, ரவை, எண்ணெய் சேர்த்து பிசையவும். தொடர்ந்து வெட்டிய வாழைக்காய்யை இதில் முக்கி எடுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து இருபக்கமும் வறுக்க வேண்டும். கருவேப்பிலையை சேர்த்து கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“