Advertisment

வாழைப்பூவில் இப்படி சட்னி செய்யலாம்: செம்ம ருசியான ரெசிபி

இந்த சட்னி ஒரு முறை செய்து பாருங்க. வாழைப்பூவில் செய்ததானு ஷாக் ஆயிடுவாங்க செம்ம ரெசிபி.

author-image
WebDesk
New Update
sadae

இந்த சட்னி ஒரு முறை செய்து பாருங்க. வாழைப்பூவில் செய்ததானு ஷாக் ஆயிடுவாங்க செம்ம ரெசிபி.

Advertisment

தேவையான பொருட்கள்

வாழைப்பூ- 1

100 கிராம் சின்ன வெங்காயம்

5 காய்ந்த மிளகாய்

2 ஸ்பூன் வெள்ளை உளுந்து

2 ஸ்பூன் கடலை பருப்பு

15 பல் பூண்டு

1 நெல்லிக்காய் அளவு புளி

1 ஸ்பூன் கொத்தமல்லி  

அரை ஸ்பூன் சீரகம்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும். அதில் மல்லி சேர்த்துகொள்ளவும். வரமிளகாய் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து அதில் சீரகம் சேர்த்துகொள்ளவும். இதை அனைத்தையும் வறுக்கவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, வாழைப்பூ சேர்த்து வதக்கவும். வாழைப்பூ நிறம் மாறியதும், இதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துகொள்ளவும். இதை நன்றாக வதக்கவும். தொடர்ந்து இதில் புலி மற்றும் வதக்கிய அனைத்தையும் அரைத்துகொள்ளவும். சூப்பரான சட்னி ரெடி. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment