vazhaipoo vadai recipe vazhaipoo vadai in tamil: வாழைப்பூவில் பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டவர்கள் சற்று வித்தியாசமாக வடை செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எவ்வளவு நாள் தான் உளுந்து வடை, மசால் வடையே சாப்பிடுவீர்கள். சற்று வித்தியாசமா வாழைப்பூ வடை சாப்பிடலாம் வாங்க.
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து விட்டு சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் மஞ்சள், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
துவரம் பருப்பினை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்தபின் அதனுடன் சோம்பு, சீரகம், மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பு, வாழைப்பூ, நறுக்கி வெங்காயம், கறிவேப்பிலையை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil