ஒரு முறை வாழைத்தண்டு சட்னி இப்படி செய்து பாருங்க . செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு 2 கப்
1 ஸ்பூன் மல்லி
1 ஸ்பூன் வேர்கடலை
2 பச்சை மிளகாய்
1 வெங்காயம் நறுக்கியது
1 ஸ்பூன் பொட்டுக்கடலை
புளி சிறிய அளவு
1 கைபிடி கொத்தமல்லி
2 ஸ்பூன் தேங்காய்
2 ஸ்பூன் எண்ணெய்
1 கொத்து கருவேப்பிலை
2 வத்தல் மிளகாய்
கால் ஸ்பூன் கடுகு
செய்முறை: வாழைத்தண்டின் நாரை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் மல்லி, வேர்கடலை, பொட்டுக்கடலையை வறுத்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில். எண்ணெய் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், வாழைத்தண்டு, கொத்தமல்லி இலை, வேங்காய், மற்றும் வறுத்ததை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதை புளியுடன் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, வத்தலை தாளித்து கொட்டவும்.