ஒரு முறை வாழைத்தண்டு பொரியல், இப்படி செய்து பாருங்க.
தேவையானப் பொருட்கள்
வாழைத்தண்டு - 1 பெரிய துண்டு
பாசிபருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது )
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பில்லை -1 கொத்து
செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாழைத்தண்டை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் 1 ஸ்பூன் மோர் கலந்து நறுக்கிய வாழைத்தண்டுகளை அதில் போடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வாழைத்தண்டை சேர்க்கவும். அதனுடன் பாசிபருப்பை கழுவி தண்ணீரை வடித்து அதையும் சேர்த்து கிளறரவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கடாயை மூடி வேகவிடவும். நீர் சுண்டி வெந்ததும் இறக்கிவிடவும். சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.