vazhaithandu soup recipe , vazhaithandu soup in tamil : நட்சத்திர ஹோட்டல்களில் பலமான விருந்துக்கான முன் தயாரிப்புகளில் ஒன்றாகப் பரிமாறப்பட்டவை சூப் வகைகள். இன்று தெருவோரக் கடைகளின் பிரதான உணவாக மாறியிருக்கிறது. காபி, டீயைத் தவிர்க்க நினைக்கிற பலரின் சாய்ஸும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த சூப் வகைகளே.
Advertisment
தினமும் ஒரு முறையேனும் சூப் குடித்துவிட வேண்டும்' என்ற உணவுமுறை மாற்றத்துக்கு பெரும்பாலானோர் பழகியிருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு முன் பசியை அதிகரிக்க சூப் குடிப்பது, மாலை வேளையில் ஆரோக்கிய பானமாக சூப் அருந்துவது என இந்தப் பழக்கம் பலவிதமாகப் பின்பற்றப்படுகிறது. தமிழர் உணவுகளில் எப்போதும் உணவே அற மருந்தாகும். அந்த வகையில் இன்று சத்து மிக்க வாழைத்தண்டு சூப்.
vazhaithandu soup recipe செய்முறை:
வாழைத்தண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 6 கப் நீர் விட்டு சிறுதீயில் கொதிக்க விடவும் தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
வாழைத்தண்டு பாதி வெந்திருக்கும் போது வதக்கிய கலவையையும், பொடி செய்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்கவும்.
சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இல்லை எனில் மிளகு தூள் சூப் சாப்பிடும்போது கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil