Easy Vazhakkai Fry: உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்து விட்டார்கள். அசைவ சமையல் செய்வதற்கு நேரமில்லை, ஸோ சைவ சமையல் தான். ஆனால் நான்வெஜ் டேஸ்ட்டில் எளிமையான சைவ சைட் டிஸ்ஸை செய்ய முடிந்தால், அதை விட பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்கப்போகிறது?
ஆம் இந்த வாழைக்காய் வறுவல் உங்களுக்கு கை கொடுக்கும்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்: இந்த அடக்கத்துக்கு பின்னாடி ஒரு ஆப்பு இருக்கும் போலயே…
தேவையானப் பொருட்கள்
வாழைக்காய் - ஒன்று
எண்ணெய் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாழைக்காயின் தோலை உரித்துக்கொள்ளவும். பின்னர் நீளமாகவோ அல்லது வட்டமாகவோ கனமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய வாழைக்காய் துண்டுகளைத் தண்ணீரில் போட்டு நன்கு அலசிக்கொள்ளவும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீரைச் சூடாக்கவும். அதில் நறுக்கிய வாழைக்காயைப் போட்டு அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் மூடி போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பப்ளி டூ ஸ்லிம் அண்ட் ட்ரிம்: தமிழ் நடிகைகளின் ஆச்சர்ய வெயிட் லாஸ்!
பிறகு தண்ணீரை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். வாழைக்காயை ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, சூடானதும் வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்துப் பொரிக்கவும்.
சிறிது பொன்னிறமாக மாறும்போது மெதுவாக எடுக்கவும். உப்பைக் கைகளால் தூவி, சூடாகப் பரிமாறவும்.
இதனை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போல சாஸுடனும் சாப்பிடலாம். காரம் சேர்க்காத இந்த டிஷ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”