Veg kurma recipe, veg kurma in tamil : காய்கறி குர்மா பரோட்டா மற்றும் பூரிக்கு ஒரு சிறந்த சைடிஷ் கிரேவி. இந்த காய்கறி குருமா, காய்கறிகளின் அனைத்து நன்மைகளையும் தேங்காய் பேஸ்டுடன் ஒரு சுவையான கிரீமி கறியில் இணைக்கிறது. இந்த சுவையான காய்கறி கறியில் நாம் விரும்பும் எந்த காய்கறிகளையும் சேர்க்கலாம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை ஆரோக்கியமான அளவில் உட்கொள்ளலாம்.
Advertisment
இது ஒரு குறைந்த கலோரி டின்னர் குருமா ஆகும், இது அனைவருக்கும் பிடிக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தக்கவைத்து தயாரிக்கலாம்
veg kurma recipe : செய்முறை!
காய்கறி கலவை - 1 கப் (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை)
Advertisment
Advertisements
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை, லவங்கம் - 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு அதக்கி தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் காய்கறிகளை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்த பின் மல்லி இழை தூவி அடுப்பை அணைத்துவிடவும்.
சுவைமிகுந்த வெஜிடபிள் வெள்ளை குருமா தயார். இவை இடியாப்பம், சப்பாத்திகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil