Advertisment

மசாலா இல்லை; வெள்ளை நிறத்தில் பிரியாணி: வெங்கடேஷ் பட் ஸ்பெஷல் ரெசிபி இங்கே

செஃப் வெங்கடேஷ் பட் பகிர்ந்த ஹைதராபாத் ஸ்டைல் வெஜ் பால் பிரியாணி ரெசிபி குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
paal bri.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

செஃப் வெங்கடேஷ் பட்  ஹைதராபாத் ஸ்டைல் வெஜ் பால் பிரியாணி (Veg Paal Biriyani) ரெசிபி-ஐ பகிர்ந்துள்ளார். இதை செய்வது மிகவும் எளிது என்றும் அவர் கூறியுள்ளார். 

Advertisment

தேவையான பொருட்கள்

இஞ்சி - 2 துண்டு
பச்சை மிளகாய்- 4
பூண்டு- 1 கைக்கு மேல் கொஞ்சம் 
நெய்-4,5 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய், லவங்கம், ஸ்டார் பூ- தலா 4 
பிரிஞ்சி இலை- 1 
உப்பு, பேப்பர் பொடி
பால்- மி.லி
பாஸ்மதி அரிசி- 4 டம்ளர்
புதினா இலைங
தயிர் - 100 கிராம்  
ப்ரெஷ் கிரீம்

காய்கறிகள் தேவையான அளவு 

காலிபிளவர், கேரட், பின்ஸ், பச்சை பட்டணி, உருளைக்கிழக்கு  

செய்முறை 

முதலில் இஞ்சி,  பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தனியாக வைக்கவும். இப்போது  அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து நெய் ஊற்றி ஏலக்காய், லவங்கம், ஸ்டார்  பூ, பிரிஞ்சி இலை சேர்த்து அரைத்த பேஸ்ட் சேர்க்கவும்.  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதோடு காய்கறிகளை சேர்த்து வதக்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு , பேப்பர் பொடி, 150 மி.லி பால் சேர்க்கவும்.  இதை வேக விடவும்.  

இடையில் மிக்ஸி ஜார் எடுத்து 1 ஸ்பூன் மிளகு, சீரகம், சோம்பு, ஜாவத்திரி, 4 ஏலக்காய், கொஞ்சம் பட்டை, லவங்கம் போட்டு ஜாதிக்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் காய்கறிகள்  ஓரளவு வெந்து வந்ததும் புதினா இலை, தயிர் சேர்த்து கலக்கவும்.

பின் நாம் அரைத்த வைத்த மசாலாவில் 1 டீஸ்பூன் சேர்க்கவும். இப்போது முன்னதாகவே பாதி சமைத்த பாஸ்மதி அரிசி எடுத்து சேர்க்கவும். அடுத்து 5 ஸ்பூன் ப்ரெஷ் கிரீம் சேர்த்து வதக்கிய வெங்காயம் சேர்க்கவும்.  4 டேபிள் ஸ்பூன் நெய், கொத்தமல்லி சேர்த்து முக்கால் ஸ்பூன் மசாலா தூள் சேர்த்து பாத்திரத்தை மூடி தம் போடவும். 15-20 நிமிடம் விட்டு எடுத்தால் சுவை அள்ளும்வெஜ் பால் பிரியாணி ரெடி.   

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment