ஒருமுறை இப்படி, ஸ்டஃப்டு பூரியை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
மசாலாவுக்கு : வெங்காயம் 1, தக்காளி 1 , வேக வைத்த உருளைக்கிழங்கு ஒன்று. கடுகு – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை, மஞ்சள் பொடி – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன், உப்பு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணேய், கடுகு, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கருவேப்பிலை, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து நன்றாக கிளரவும். இதைத்தொடர்ந்து மைதா, கோதுமை, உப்பு, நெய், எண்ணெய் சேர்த்து பிசையவும். தொடர்ந்து சிறிய பூரிகளாக இட்டு இதற்குள் மசாலாவை வைக்கவும். பின்பு பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“