காய்கறிகள் கொண்டு சுவையான வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தயாரித்த பரோட்டாக்கள் – 6
கேரட் – 2
தக்காளி – 2
பீன்ஸ் – 50 கிராம்
முட்டை கோஸ் – 100 கிராம்
உருளைக் கிழங்கு – 1
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெரிய வெங்காயம் -1
பச்சை பட்டாணி – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்
செய்முறை
முதலில் காய்கறி மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்கு கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அதன்பின் அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி காய்கறிகள், பட்டாணி போட்டு வதக்கி இப்போது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக வதக்கவும். பின், தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு கிளறவும். காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றி மசாலா உடன் கலந்து விடும்.
காய்கறிகளை வேக வைக்கும் நேரத்தில் தயாரித்து வைத்த பரோட்டாக்களை சிறு சிறு துண்டுகளாக கையில் பிய்த்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் காய்கறி மசாலா தயாரான உடன் இந்த பரோட்டாகளை போட்டு கலக்கவும். பரோட்டா துண்டுகளும், காய்கறி மசாலாவும் நன்றாக கலந்து வரும். இது ஒரு சுவையான இருக்கும். அப்படியே எடுத்து பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“