Advertisment

கொஞ்சம் காய்கறிகள்; பரோட்டா இப்படி செய்து பாருங்க

வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Vege para.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வெஜிடபிள் கொத்து பரோட்டா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

பரோட்டா – 6
கேரட் – 2
தக்காளி – 2
பீன்ஸ் – 50 கிராம்
முட்டைகோஸ் – 100 கிராம்
உருளைக் கிழங்கு – 1
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன் 
தனியாத் தூள் – 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 3 ஸ்பூன் 
பெரிய வெங்காயம் -1
பச்சை பட்டாணி – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்

செய்முறை 

பரோட்டாவை  சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அதன்பின் காய்கறிகள், பட்டாணி போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். 

தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறவும். காய்கறிகள் வேக வைத்து, தண்ணீர் ஊற்றி கெட்டியானதும், மீதமுள்ள எண்ணெய் ஊற்றி பரோட்டா துண்டுகளைப் போடவும். பரோட்டா துண்டுகளும், காய்கறி மசாலாவும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment