சுவையான காய்கறி புலாவ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
கேரட் – 2
பீன்ஸ் – 6
பட்டாணி – 50 கிராம்
வெங்காயம் – சிறிதளவு
வெனிலா எசன்ஸ் – 1ஸ்பூன்
வெண்ணெய் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, பிறகு உப்பு சேர்த்து எப்போதும் போல் முக்கால்வாசி அளவிற்கு வேக வைத்து எடுக்கவும். அதை சூடாக ஹாட் பாக்ஸில் போட்டு வைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் ஊற்றி உருக்கியதும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிதமான தீயில் வைத்து வேகவிடவும். இப்போது பாஸ்மதி சாதத்தை சேர்த்து வெனிலா எசன்ஸ் ஊற்றி கலக்கி விட்டு வேக விடவும். கடைசியாக முந்திரி தாளித்து சேர்க்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான காய்கறி புலாவ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“