காலை டிபனுக்கு இது பெஸ்ட்: மிக்ஸ்டு வெஜிடபுள் புட்டு செய்வது எப்படி?

Simple Breakfast Recipes மிகவும் குறைந்த நேரத்தில் எளிதாக செய்ய கூடிய இந்த ரெசிபி நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும்.

Vegetable Puttu recipe simple breakfast recipes tamil
Vegetable Puttu recipe PC : Kitchen Corner

Vegetable Puttu Recipe Tamil : இந்த கொரோனா காலகட்டத்தில் சுவையான அதே நேரத்தில் சத்தான வித்தியாமான புட்டு வகை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். ஏராளமான காய்கறிகளை சேர்த்து மிகவும் குறைந்த நேரத்தில் எளிதாக செய்ய கூடிய இந்த ரெசிபி நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும்.

தேவையான பொருள்கள் :

சிறிய கேரட் – 1

பீன்ஸ் – 4

பச்சை பட்டாணி – 25 கிராம்

காலிஃபிளவர் – 1/4 கப்

உருளைக்கிழங்கு சிறியது – 1

கடலை எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – சிறிதளவு

பூண்டு – 5 பற்கள்

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரிசி மாவு – 1 கப் (100 கிராம்)

செய்முறை:

தேவையான காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பிறகு, உப்பு, மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கலந்துவிடவும். தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்கறிகள் ஓரளவிற்கு வெந்ததும் தீயை அணைத்து, அதனோடு அரிசி மாவு, உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து, உதிரியாகக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு தயாரான காய்கறி-அரிசி மாவு கலவையை இட்லி குக்கர் அல்லது புட்டு மேக்கரில் 10 நிமிடங்களுக்கு வேகவையுங்கள். சத்தான காய்கறி புட்டு தயார். இதனோடு தேங்காய் சட்னி வைத்துச் சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vegetable puttu recipe simple breakfast recipes tamil

Next Story
குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு! இப்போ சீரியல்ல அம்மா…Anju Actress, Tamil Serial News, Sun TV Magarasi Serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com