Advertisment

ஹெல்தி வெஜிடபிள் சாலட், சில நிமிடங்களில்! எளிமையான இரவு டின்னர்

Vegetable Salad Home Making Tamil Video: எடை குறைய விரும்புகிறவர்கள் அண்மைகாலமாக மதிய உணவாகவே சாலட்டை தேர்வு செய்வது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹெல்தி வெஜிடபிள் சாலட், சில நிமிடங்களில்! எளிமையான இரவு டின்னர்

Vegetable Salad Recipe In Tamil

Vegetable Salad Recipe In Tamil, Vegetable Salad Home Making Tamil Video: காய்கறிகள் நமது உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தினமும் குறிப்பிட்ட அளவில் காய்கறி எடுத்துக் கொள்வது அவசியம். சாப்பிடும் அரிசி உணவைவிட காய்கறி அளவு அதிகமாக இருப்பது உசிதம் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள்.

Advertisment

எனினும் வழக்கமான காய்கறி கூட்டை நாம் அப்படி சாப்பிட முடிவதில்லை. அதுவே பிடித்த காய்கறிகளை சாலட்டாக செய்து முயற்சியுங்கள். தேவையான அளவுக்கு உங்களால் காய்கறியை சாப்பிட்டுவிட முடியும். அந்த வகையில் வெள்ளரி- கேரட் சாலட் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

Vegetable Salad Home Making Tamil Video: வெள்ளரி- கேரட் சாலட்

வெள்ளரி- கேரட் சாலட் செய்யத் தேவையான பொருட்கள்: வெள்ளரி- 1, அரை கப் ரைஸ் வினிகர், இரண்டரை கப் நறுக்கிய வெங்காயம், அரை கிராம் அரைத்த இஞ்சி, அரை டீ ஸ்பூன் உப்பு, ஒன்றரை கப் கேரட் (நறுக்கியது), ஒன்றரை டீ ஸ்பூன் சர்க்கரை, இரண்டரை தேக்கரண்டி சிவப்பு குடை மிளகாய் (நறுக்கியது), 1 டீ ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்.

வெள்ளரி- கேரட் சாலட் செய்முறை:

ஒரு சிறு பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு, இஞ்சி, வெஜிடபிள் ஆயில், சர்க்கரை, ரைஸ் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு வெங்காயம், கேரட், குடை மிளகாய், வெள்ளரி சேர்த்து நன்றாக கிளறவும். இவை அனைத்தையும் உங்களுக்கு பிடித்த அளவில் நறுக்கிக் கொள்ளவும். இதனை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்தால், ஜில்லென டேஸ்டியான ஹெல்தி சாலட் ரெடி!

சாலட்டை காலை, மதியம், இரவு என எந்த நேரத்திற்கும் உங்கள் விருப்பப்படி உணவாக எடுத்துக் கொள்ளலாம். எடை குறைய விரும்புகிறவர்கள் அண்மைகாலமாக மதிய உணவாகவே சாலட்டை தேர்வு செய்வது குறிப்பிடத்தக்கது. எனினும் அவசர தேவைக்கு டிபனாக இதை பயன்படுத்துவது, அனைவருக்கும் உகந்ததாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment